கோட்டை மாரியம்மன் கோயிலில் மாசித்திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25பிப் 2020 03:02
திண்டுக்கல், மாசித் திருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் கொடியேற்றம் நடந்தது.
திண்டுக்கல்லில் பிரசித்திபெற்ற கோட்டை மாரியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் மாசித்திருவிழா அதிவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு பிப்.20 மாலை 6:00 மணிக்கு பூத்த மலர் பூ அலங்காரத்துடன் திருவிழா துவங்கியது. விழாவில் இன்று (பிப்.25) பகல் 12:00 மணிக்கு கொடியேற்றம் கோலாகலமாக நடைபெற்றது. பிப்.28 பகல் 2:00 மணிக்கு அம்பாள் நாகல் நகர் புறப்பாடு நடக் கிறது.இதைத் தொடர்ந்து மார்ச் 6 ம்தேதி காலை 6:00 மணிக்கு பூக்குழி இறங்குதல், இரவு 8:00 மணிக்கு தேர் பவனி, மார்ச் 7 இரவு 10:00 மணிக்கு தசாவதாரம், மார்ச் 8 காலை 10:00 மணிக்கு மஞ்சள் நீராட்டுதல், மாலை 5:00 மணிக்கு கொடி இறக்கம், மார்ச் 9 இரவு 8:00 மணிக்கு ஊஞ்சல் உற்ஸவம், மார்ச் 10 மாலை 6:00 மணிக்கு தெப்ப உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது என, கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.