பதிவு செய்த நாள்
28
பிப்
2020
12:02
திருப்பூர்: திருமுருகன்பூண்டி, திருமுருகநாத சுவாமி கோவில் தேர்த்திருவிழா, மார்ச் 2ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.திருமுருகன்பூண்டியில் உள்ள பிரசித்தி பெற்ற, திருமுருகநாத சுவாமி கோவிலில், மாசி மாதம், தேர்த்திருவிழா விமரிசையாக நடந்து வருகிறது.
அதன்படி, தேர்த்திருவிழா, மார்ச் 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.அம்மையர், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கும், வாகன காட்சிகள், தினமும் நடக்கும். வரும், மார்ச் 3ல், சூரிய, சந்திர மண்டல காட்சி; 4ம் தேதி பூதவாகனம், சிம்ம வாகன காட்சி; 5ம் தேதி புஷ்ப விமான காட்சி, 6ம் தேதி பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நிகழ்ச்சி, ரிஷப வாகன காட்சிகள் நடக்க உள்ளன. திருமுருகநாத சுவாமி, முயங்குபூண்முலை வல்லியம்மை திருக்கல்யாண உற்சவம், 7ம் தேதி நடக்கிறது; அன்று, அன்னவாகனம் மற்றும் யானை யாகன காட்சிகள் நடக்கின்றன. உற்சவமூர்த்திகள், 8 ம் தேதி காலை, திருத்தேர்களில் எழுந்தருள்கின்றனர். அன்று மாலை, 3:00 மணிக்கு, தேர்வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.முதல் நிலைகளில் நிற்கும் திருத்தேர்தர்கள், 9ம் தேதி மாலை மீண்டும் தேர்வீதிகள் வழியாக வந்து, நிலையை அடைகிறது. தொடர்ந்து, 10ம் தேதி பரிவேட்டை, தெப்பத்திருவிழா, 11ம் தேதி ஸ்ரீசுந்தரர் வேடுபறி திருவிழா, 12 ம் தேதி பிரம்மதாண்டவ தரிசன காட்சி, 13 ம் தேதி மஞ்சள் நீர் விழா நடைபெற உள்ளது. தேர்த்திருவிழாவையொட்டி, 2 முதல், 12ம் தேதி வரை, தினமும் இரவு, 7:00 மணி முதல் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.