பாலக்காடு: பாலக்காடு மாவட்டம் கோட்டாயி செம்பை பார்த்தசாரதி கோவிலில் மாசி மாத ஏகாதசி உற்சவத்தின் கொடியேற்றம் நேற்று மாலை 7.30 மணியளவில் கோவில் தந்திரி அண்டலாடி மனை சங்கரன் நம்பூதிரிப்பாடின் தலைமையில் நடைபெற்றன. முன்னதாக சகோதரிகளான சங்கீதா-சவுந்தர்யா ஆகியோரின் நாதஸ்வர கச்சேரி நடைபெற்றன.
106வது ஏகாதசி சங்கீத உற்சவம் இன்று மாலை துவங்குகின்றன. துவக்க சச்சேரியை பத்மபூஷன் டி.வி., கோபாலகிருஷ்ணன் குழுவினர் நடத்துகின்றன. தொடர்ந்து சுகுமாரி நரேந்திர மேனோன் பாடுகின்றன. தொடர்ந்து நாட்களின் பலவேறு இசை கலைஞர்களின் சங்கீத ஆராதனை நடைபெறுகின்றன. சங்கீத உற்சவத்தின் நிறைவு நாளான 6ம் தேதி 8.30 மணிக்கு உஞ்ச விருத்தி, 10க்கு பஞ்சரத்தின கீர்த்தனை, இளம் கலைஞர்களின் சங்கீதா ஆராதனை நடைபெறுகின்றன. தொடந்து மாலை பிரகாஷ் உள்ளியேரியின் ஆர்மோனியம் கச்சேரி, விஜய் யேசுதாஸ், பிரபல இசைக்கலைஞர் யேசுதாஸ், ஜயன் ஆகியோரின் சங்கீத கச்சேரி நடைபெறுகின்றன. 7ம் தேதி நடக்கும் ஆறாட்டு நிகழ்ச்சியுடன் உற்சவம் நிறைவு பெறுகின்றன.