தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பது முதுமொழி. இன்பமும், துன்பமும் அவரவர் முற்பிறவியின் செயலைப் பொறுத்தே உண்டாகிறது. நன்மையோ, தீமையோ எதைச் செய்தாலும் அதற்கு காரணமாக இருப்பவர்கள் வெறும் கருவி மட்டுமே. இதை உணர்ந்தால் ‘எல்லாம் கடவுளின் செயல்’ என்ற எண்ணம் ஏற்படும். அந்நிலையில் மன்னிக்கும் பக்குவம் கிடைக்கும்.