வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த கரியாப்பட்டணம் சந்தனமாரியம்மன் கோவிலில் சித்திரை பெருவிழா கடந்த 22ம் தேதி துவங்கியது. விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, வீதியுலா காட்சிகளும் நடத்தப்பட்டது. நேற்றுமுன்தினம் மஞ்சள் விளையாட்டுடன் குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதியுலா நடந்தது. காவடி எடுத்தும், மாவிளக்கு எடுத்தும், முடி இறக்கியும் அம்மனுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏற்பாட்டை கரியாப்பட்டணம் கிராம மக்கள் செய்திருந்தனர்.
* வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் செட்டியார் குத்தகையில் உள்ள ஆனந்த காமாட்சியம்மன் மகா முனீஸ்வரர் கோவிலில் சித்திரை விழா நடந்தது. நிறைவாக, மாலையின் மஞ்சள் விளையாட்டு சிறப்பு குதிரையில் அம்மன் வீதியுலா காட்சியும், அதைத்தொடர்ந்து அம்மனுக்கு அக்னிக்கப்பரை எடுக்கும் நிகழ்ச்சியும் நடந்தது.