பழநி,: பழநி மாரியம்மன்கோயில், மாசித்திருவிழாவில் கொடியேற்றமும், கம்பத்திற்கு பூவோடு வைக்கும்விழா நடைபெற் றது.முதல்நாள் பிப்., 21 ல் திருக்கம்பம் நடப்பட்டது. நேற்று திருவிழாவை முன்னிட்டு மாரியம்மன் கோயில் கொடிமரத்திற்கு பூஜைகள் செய்து இரவு கொடியேற்றம் நடந் ததுதிருக்கம்பத்தில் பூவோடு வைக்கப்பட்டது. கோயிலில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.இன்று காலை 9:00 மணிக்கு மேல் 10:00 மணிக்குள் அடிவாரம் மற்றும் குமாரசமுத்திரம், அழகு நாச்சியம்மன் கோவிலில் திருக்கல்யாணம் நடைபெறும். மாரியம்மன் கோயிலில் மார்ச் 10ல் திருக்கல்யாணம், மார்ச் 11ல் தேரோட்டம் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை இணைஆணையர் ஜெயசந்தரபானுரெட்டி துணை ஆணையர் செந்தில்குமார் செய்கின்றனர்.