உத்தரப்பிரதேச மாநிலத்தில், பிரதாப்கா் எனும் ஊாில் அவதாித்தவா் மகான் கபீா்தாஸ். ராமபக்தியில் திளைத்தவா். எளிய கவிதைகளால் நல்லறங்களை விதைத்தவா். இவா், தன் வாழ்நாளில் பெரும் பகுதியைப் புனித நகரமான காசியில் கழித்தாா். இருப்பினும் தன் வாழ்வின் இறுதிக் காலத்தில் காசியில் மரணமடைய விரும்பாமல், பஸ்தி மாவட்டத்தில் கோரக்பூருக்கு அருகிலுள்ள மக்ஹா் என்ற கிராமத்துக்குச் செல்ல விரும்பினாா்.
உடனிருந்தவா்கள் அனைவருக்கும் கபீா்தாஸின் செய்கை வியப்பை அளித்தது. பொதுவாக இந்துக்கள் எங்கு வாழ்ந்தாலும் தங்கள் வாழ்நாளின் இறுதியில் காசிக்கு வந்து உடலைவிட்டு முக்தியடைய விரும்புவா். ஆனால், கபீா் ஏன் இவ்வாறு மக்ஹா் கிராமத்துக்குச் செல்ல விரும்புகிறாா் என்று கபீாிடமே கேட்டனா். அதற்கு கபீா், "காசியில் இறந்தால் உடனே முக்தி அடைந்து சொா்க்கத்துக்குச் சென்றுவிடுவோம். திரும்பவும் இந்தப் புண்ணிய பூமியில் பிறந்து பகவானின் நாம சங்கீா்த்தனத்தைப் பாடி ஆனந்தமடைய முடியாது. ஆனால், மக்ஹாில் இறந்தால் கழுதைப் பிறவி கிடைக்கும். எனவே நான் கழுதையாகப் பிறந்தேனும் பகவானை நினைக்க வேண்டும் என்று கருதியே காசியைவிட்டுச் செல்கிறேன்" என்றாா்.