கோயிலில் சிவதரிசனத்திற்கு அனுமதி அளிப்பவர் நந்தீஸ்வரர். ‘சிவரகசியம்’ என்னும் ஆகமத்தில் இவரின் பெருமை கூறப்பட்டுள்ளது. இவருக்கு ரிஷபதேவர், நந்திகேஸ்வரர் என்றும் பெயருண்டு. சிவபக்தர்களில் இவரே தலைமையானவர். சிவ ஆகமங்கள் அனைத்தும், நந்தி மூலமாகவே உலகிற்கு வெளிப்பட்டன. அடியவர்களுக்கு அருள்புரியும் போதெல்லாம் சிவபார்வதி நந்திமீது எழுந்தருளி காட்சியளிப்பர். எப்போதும் சிவதியானத்தில் ஆழ்ந்திருக்கும் இவரை தர்மத்தின் வடிவமாகப் போற்றுவர். இவரின் இரு கொம்புகளுக்கு இடையே நின்று சிவன் நடனம்புரிவதாக ஐதீகம். வெள்ளை உள்ளம்படைத்த இவரை வழிபட்டால் தடைகள் நீங்கி, செயல்கள் வெற்றி பெறும்.