பதிவு செய்த நாள்
07
மார்
2020
12:03
ராமேஸ்வரம்: கச்சத்தீவு திருவிழாவுக்கு ராமேஸ்வரத்தில் இருந்து படகில் 2,570 பக்தர்கள் புறப்பட்டு சென்றனர்.
பாக் ஜலசந்தி கடலில் அமைந்துள்ள கச்சத்தீவு அந்தோணியார் சர்ச் திருவிழாவுக்கு செல்ல நேற்று ராமேஸ்வரத்திற்கு தமிழகம், வெளிமாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் வந்தனர். இவர்களின் அடையாள அட்டையை போலீசார், சுங்கத்துறையினர் சோதனையிட்டனர். தடை செய்த பிளாஸ்டிக், கூடுதலாக இருந்த கைலிகள், பீடி பண்டல்கள், உணவு பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.95 விசை, நாட்டுபடகுகளில் 2,028 ஆண்கள், 450 பெண்கள், 92 குழந்தைகள் என 2,570 பக்தர்கள் புறப்பட்டு சென்றனர். இந்திய கடற்படை ெஹலிகாப்டர், கடலோர காவல் படை கப்பல்கள் ரோந்தில் ஈடுபட்டன.கச்சத்தீவில் இலங்கை நெடுந்தீவு பாதிரியார், விழா கொடியை ஏற்றி வைத்தார். தமிழக பாதிரியார்கள் சிலுவை பாதை பூஜை, நவநாள் திருப்பலி பூஜை நடத்தினர்.டிரைவர் கைதுமுனியராஜ் என்பவரது படகில் 34 பேர் கச்சத்தீவு திருவிழாவுக்கு சென்றனர். அங்கு முனியராஜிற்கும் படகு டிரைவர் செல்வம் என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த செல்வம், படகுடன் நேற்றிரவு ராமேஸ்வரம் திரும்பி வீட்டுக்கு சென்றார்.
தகவலறிந்த க்யூ பிரிவு போலீசார் செல்வத்தை கைது செய்தனர். இப்படகில் சென்ற 34 பக்தர்கள் இன்று எப்படி கரை திரும்புவார்கள் என கேள்வி எழுந்துள்ளது. இன்று திரும்பும் பக்தர்களுக்கு கொரோனா சோதனை நடத்த 6 மருத்துவர்கள், 10 செவிலியர்கள் குழு தயாராக உள்ளது.ரூ.6க்கு விற்ற துணியிலான முக கவசம், தற்போது ரூ.15க்கு விற்கப்படுகிறது. ராமேஸ்வரம் வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் முக கவசம் கிடைக்காமல் தவிக்கின்றனர்.