பதிவு செய்த நாள்
07
மார்
2020
12:03
பண்ருட்டி: திருக்கோவிலுார் தேகளீச பெருமாள், கடலுார் மாசிமக உற்சவ தீர்த்தவாரியில், பக்தர்களுக்கு அருள்பாலிக்க, ஸ்ரீதேவி, பூமிதேவி சகிதமாக தங்க பல்லக்கில் நேற்று பண்ருட்டி திருவதிகைக்கு வருகை தந்தார்.
திருக்கோவிலுார் ஸ்ரீதிரிவிக்ரமசுவாமி( உலகளந்த பெருமாள்) கோவிலில் இருந்து உற்சவர் தேகளீசபெருமாள் கடலுார் தேவனாம்பட்டினம் கடற்கரையில் மாசிமக
மகோற்சவத்திற்காக கடந்த 4ம் தேதி திருக்கோவிலுாரில் பெருமாள் ஸ்ரீதேவி,பூமிதேவி சகிதமாக இருந்து பல்லக்கில் புறப்பட்டார். நேற்று பண்ருட்டி நகரம் திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலுக்கு பல்லக்கில் வந்து தங்கினார். இன்று 7ம்தேதி மேல்பட்டாம்பாக்கம், வாழப்பட்டு, திருகண்டேஸ்வரம், நெல்லிக்குப்பம், இரவு காராமணிக்குப்பத்தில் உற்வர் தேகளீசபெருமாள் தங்குகிறார். நாளை 8 ம்தேதி பில்லாலி நம்மாழ்வார், ராமானுஜகூடத்தில் கருடசேவையிலும், இரவு கடலுார் திருப்பாதிரிபுலியூர் வரதராஜபெருமாள் கோவிலிலும், 9ம்தேதி மாசிமக தீர்த்தவாரியில் கடலுார் தேவனாம்பட்டினம் கடற்கரையில் பொது மக்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் தேகளீசபெருமாள் அருள்பாலிக்கிறார். இரவு வரதராஜ பெருமாள் கோவிலில் திருமஞ்சனம், 11ம் தே தி திருவந்திபுரம் மணவாளமுனிகள் கோவில், திருவந்திபுரம் உற்சவத்தில் கலந்து கொள்கிறார். 12ம்தே தி கடலுாரில் இருந்து புறப்பட்டு 17ம்தேதி திருக்கோவிலுார் திரும்புகிறார்.