பதிவு செய்த நாள்
09
மார்
2020
03:03
மார்ச் 9, மாசி 26: பவுர்ணமி, ஹோலி, காம தகனம், திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் தெப்பம், நத்தம் மாரியம்மன் அரண்மனைப் பொங்கல், திருமோகூர் காளமேகப்பெருமாள் யானைமலைக்கு எழுந்தருளல், திருச்செந்துார் முருகன் தெப்பம்
மார்ச் 10, மாசி 27: நத்தம் மாரியம்மன் பொங்கல், பூக்குழி விழா, காரமடை ரங்கநாதர் சேஷ வாகனத்தில் தெப்பம், திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் தீ்ர்த்தவாரி, திருக்குறுங்குடி நம்பி உற்ஸவம் ஆரம்பம், குரங்கணி முத்துமாலையம்மன் பவனி, சுவாமி மலை முருகன் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்
மார்ச் 11, மாசி 28: நத்தம் மாரியம்மன் பூப்பல்லக்கு, காரமடை அரங்கநாதர் சாற்றுமுறை, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் நரசிம்மர் திருமஞ்சனம், எரிபத்த நாயனார் குருபூஜை
மார்ச் 12, மாசி 29: முகூர்த்த நாள், சங்கட ஹர சதுர்த்தி, உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் உற்ஸவம் ஆரம்பம், காரமடை ரங்கநாதர் வசந்த உற்ஸவம் ஆரம்பம், திருவெள்ளறை சுவேதாத்திரி நாதர் உற்ஸவம், திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை
மார்ச் 13, மாசி 30: முகூர்த்த நாள், உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் காலை பல்லக்கு, இரவு சூரியபிரபையில் பவனி, திருவெள்ளறை சுவேதாத்திரி நாதர் காலை கற்பக விருட்சம், இரவு கமல வாகனம், ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி தங்கப் பல்லக்கு
மார்ச் 14, பங்குனி 1: ஷடசீதி புண்ணிய காலம், காரடையான் நோன்பு, காங்கேயநல்லுார் முருகன் லட்ச தீபக் காட்சி, உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் சேஷ வாகனம், மன்னார்குடி ராஜகோபால சுவாமி உற்ஸவம் ஆரம்பம், கல்யாண அவசரத் திருக்கோலம், திருக்குறுங்குடி ஐந்து கருடசேவை, திருவெள்ளறை சுவேதாத்திரி நாதர் பவனி, ஸ்ரீரங்கம் பெருமாள் திருமஞ்சனம்