பதிவு செய்த நாள்
10
மார்
2020
02:03
வால்பாறை: வால்பாறையில், காமாட்சியம்மன் கோவில் திருவிழாவில், அம்மன் திருக்கல்யாண வைபவத்தில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.வால்பாறை நகர் வாழைத்தோட்டம் காமாட்சியம்மன் கோவிலின், 52ம் ஆண்டு திருவிழாவையொட்டி, கடந்த 2ம் தேதி காலை, 9:00 மணிக்கு திருக்கொடி ஏற்றப்பட்டது.
நேற்று, 9ம் தேதி காலை, வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலிருந்து ஏகாம்பரஈஸ்வரர் மாப்பிள்ளை அழைத்து, காமாட்சியம்மன் கோவிலுக்கு திருமண சீர்வரிசையுடன் பக்தர்கள் சென்றனர்.மதியம், 12:30 மணிக்கு ஏகாம்பரஈஸ்வருக்கும், அன்னை காமாட்சிக்கும் திருக்கல்யாணம் நடந்தது.இதில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.மாலை, 4:00 மணிக்கு திருவிளக்கு பூஜையும், 6:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் மருதமுத்து, செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.