காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் மாசி -பங்குனித் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மார் 2020 02:03
காரைக்குடி: காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி-பங்குனித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி-பங்குனித் திருவிழா நடைபெறும். இவ்வாண்டு, இன்று காலை கொடியேற்றம், காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது. மார்ச் 17 ஆம் தேதி இரவு 7:00 மணிக்கு திருக்கோயில் கரகம், மதுக்குடம், முளைப்பாரி நிகழ்ச்சி நடைபெறும். அதனைத் தொடர்ந்து மார்ச் 18 ஆம் தேதி காலை 9:30 மணிக்கு காவடி, பூக்குழி இறங்குதல், பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை, 4;00 மணிக்கு திருக்கோயில் கரகம் மற்றும் மதுக்குடம் எடுக்கும் நிகழ்ச்சியும், இரவு 8:20 மணிக்கு காப்புப் பெருக்குதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. மார்ச் 19 ஆம் தேதி இரவு 9:00 மணிக்கு அம்மன் திருவீதி உலா நடைபெறும். தொடர்ந்து மார்ச் 20 ஆம் தேதி அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெறும்.