பதிவு செய்த நாள்
11
மார்
2020
10:03
குன்னுார்:குன்னூர் அருவங்காடு அருகே, ஜெகதளா பேரூராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள தென்பழனி பாலமுருகன் கோவிலில், 4ம் ஆண்டு திருவிழா நடந்தது.விழாவில், மகா கணபதி ஹோமம், அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை, அன்னதானம், ஆகியவை நடந்தது. அன்னதானத்தை அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை உதவி பொது மேலாளர் ஷெட்டி துவக்கி வைத்தார்.விழாவில், குன்னூர் எம்.எல்.ஏ., சாந்தி ராமு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.காந்திநகர் பகுதியில், 6 அடி அகல மண் சாலை, சிமென்ட் சாலையாக மாற்ற, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்,என, எம்.எல்.ஏ., உறுதி அளித்தார். ஊர் தலைவர் நாகராஜ், செயலாளர் சுரேஷ், குன்னூர் ஒன்றிய செயலாளர் ராஜு உட்பட பலர் பங்கேற்றனர்.