பதிவு செய்த நாள்
13
மார்
2020
12:03
அவிநாசி: கொரோனா’ வைரஸ் பாதிப்பு தவிர்க்க , திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே சேவூர் வா லீஸ்வரர் கோவில், நேற்று மிருத்யுஞ்சய ஹோமம் துவங்கப்பட்டது.
கோவில் சிவாச்சாரியார் காசி விஸ்வநாதன் கூறியதாவது: கொரோனா வைரசால், பல நாடுகளில், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பாதிப்பின்றி வாழவும், உடல் ஆரோக்கியம் மேம்படவும் மிருத்யுஞ்ஜய ஹோமம் நடைபெறுகிறது. போபால் விஷவாயு தாக்குதல் நடந்தபோது கூட, இத்தகை ய ஹோமம் செய்யப்பட்டது. எதிர்மறை சக்திகளை விலக்கி, தெய்வ ஆற்றல் தரக்கூடிய, மிருத்யுஞ்ஜய ஹோமம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஹோமம் ஐந்து நாட்கள் நடக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார். இந்த பூஜையில், சேவூரை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.