தேகளீச பெருமாள் திருக்கல்யாண உற்சவத்தில் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மார் 2020 12:03
பண்ருட்டி: பண்ருட்டி வரதராஜபெருமாள் கோவிலில் திருக்கோவிலுார் தேகளீச பெருமாள் ஸ்ரீதேவி,பூமிதேவி சகிதமாக திருக்கல்யாண உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருக்கோவிலுார் ஸ்ரீதிரிவிக்ரம சுவாமி (உலகளந்த பெருமாள்) கோவிலில் இருந்து உற்சவர் தேகளீச பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவி சகிதமாக கடந்த 4 ம்தேதி புறப்பட்டு கடலுார் தேவனாம்பட்டினம் கடற்கரையில் மாசிமக மகோற்சவத்தில் கடந்த 9ம் தேதி கலந்து கொண்டார்.பின் கடந்த 12ம்தேதி கடலுாரில் இருந்து புறப்பட்டு நேற்றுமுன்தினம் இரவு பண்ருட்டி அடுத்த திருவதிகை ரங்கநாதபெருமாள் கோவிலில் வந்து தங்கினார். நேற்று காலை மேலப்பாளையம் கோவில், இந்திராகாந்தி சாலையில் வணிகர் சங்கம் சார்பில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சி, மதியம் 2:00 மணிக்கு பண்ருட்டி வரதராஜபெருமாள் கோவிலுக்கு வந்தடைந்தார். மாலை 6:00 மணிக்கு திருக்கோவிலுார் தேகளீச பெருமாள் ஸ்ரீதேவி,பூமிதேவி சகிதமாக திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். இன்று 14ம்தேதி காலை பண்ருட்டியில் இருந்து புறப்பட்டு 17ம் தேதி திருக்கோவிலுார் சென்றடைகிறார்.