பதிவு செய்த நாள்
14
மார்
2020
12:03
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வருவோருக்கு காய்ச்சல், சளி, இருமல், உடல் சோர்வு, மூச்சுத் திணறல் தென்பட்டால் நடவடிக்கை எடுக்க ஊழியர்களிடம் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது,’’ என இணை கமிஷனர் நடராஜன் கூறினார்.
அவர் கூறியதாவது: மக்கள் அதிகம் கூடும் பகுதியில் தொற்று மூலம் கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்க்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டவர்கள் கூட்ட நெரிசலில் செல்லாமல் இருக்கவும், அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்திடவும் ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஒரு வேளை பாதிக்கப்பட்டோர் கோயில் வளாகத்தில் தென்பட்டால், அவர்களுக்கு கோயில் உள்துறை அலுவலகம் மூலம் முக கவசம் வழங்கவும், மருத்துவமனைகளை அணுகிட ஆலோசனையும் வழங்கப்படும், என்றார்.