தேவிபட்டினம்: கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக தேவிபட்டினம் நவபாஷாணத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து வெறிச்சோடியது.
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவபாஷாண கோயில் அமைந்துள்ளது. கடலுக்குள் அமைந்துள்ள இந்த நவக்கிரகங்களை சுற்றி வந்து தர்பணம், திருமண தோஷம், குழந்தை பாக்கியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு பரிகார பூஜைகள் செய்கின்றனர்.இதனால் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமானோர் இங்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. இதனால் சுற்றுலா பகுதியான தேவிபட்டினம் நவபாஷணத்திற்கு பக்தர்கள் வருகை குறைந்து நேற்று வெறிச்சோடியது.