சேதுக்கரை: சேதுக்கரையில் சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில் உள்ளது.ராமாயண இதிகாசத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டதாக சேதுக்கரை விளங்குகிறது. தை, ஆடி, மகாளய அமாவாசை நாட்களில்பல லட்சம் பக்தர்கள் புனித நீராட வருகின்றனர்.
மற்ற நாட்களில் தர்ப்பணம், திதி, பித்ருக்கடன் உள்ளிட்ட சங்கல்ப பூஜைகளை நிறைவேற்றவும் வருகின்றனர். சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில் பின்புறம் உள்ள வாகனங்கள் நிறுத்தும் இடம் மணல் பகுதியாக உள்ளது. மழைக் காலங்களில் சேறும் சகதியுமாகி விடும்.இதுகுறித்து தினமலர் நாளிதழில் பல முறை படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக சேதுக்கரை ஊராட்சி, திருப்புல்லாணி ஒன்றிய நிர்வாகம் மூலம் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் தரை அமைக்கும் பணி ஒரு வாரமாக நடக்கிறது. தரமான பணி செய்ய கோரிக்கை நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், யாத்திரீகர்கள் வந்து செல்லும் இங்கு வாகனங்கள் நிறுத்தும் இடங்களிலும பேவர் பிளாக் கற்கள் அமைக்கப்படுகிறது. லாபத்தை மட்டுமே பார்க்காமல் பொதுநல நோக்கில் தரமான பணிகளை செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.