மயிலம் : மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர தேர் திருவிழா, கிருத்திகை விழா மற்றும் கோவிலில் நடைபெறும் திருமண விழாக்கள் ரத்து செய்யபட்டுள்ளது.
மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமி கோவிலில் முக்கிய விழாவான பங்குனி உத்திர தேர் விழா, மற்றும் கிருத்திகை மற்றும் சன்னதியில் நடைபெற இருந்த திருமண விழாக்கள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்த அரசு உத்தரவின் பேரில் இயல்பு நிலை திரும்பும் வரை, பக்தர்கள், பொதுமக்கள் நலன் கருதி விழாக்கள் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளனர்.மேலும், கோவிலில் சுவாமிக்கு நடைபெறும் ஆறு கால பூஜைகள் மயிலம் ஆதின கர்த்தரால் வழக்கம் போல நடைபெறும் என 20ம் பட்ட மயிலம் பொம்மபுர ஆதினம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துஉள்ளனர்.