பதிவு செய்த நாள்
27
மார்
2020
03:03
நாமக்கல்: நாமக்கல் நரசிம்மர் கோவில் பங்குனி மாத தேர்த்திருவிழா தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நரசிம்மர் கோவில், அரங்கநாதர் கோவில், ஆஞ்சநேயர் கோவில் தேர்த்திருவிழா, ஒவ்வோர் ஆண்டும் பங்குனி மாதம் நடைபெறும். நடப்பாண்டு அதற்கான நடவடிக்கைகளை கோவில் நிர்வாகம் மேற்கொண்டு வந்தது. வரும், மார்ச், 31 ல் கொடியேற்றமும், அன்று முதல் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சிகளும், நரசிம்மர், நாமகிரி தாயார் திருக்கல்யாண வைபவம் உள்ளிட்டவையும், ஏப்ரல் 8 ல் திருத்தேரோட்டமும், 14 ல் திருவிழா நிறைவு பெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்திருந்தது. கொரோனாவை தடுக்கும் வகையில், மத்திய அரசு ஏப்ரல், 14 வரை, ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளதால், நரசிம்மர் கோவில் தேர்த்திருவிழா தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாகவும், மீண்டும் திருவிழா நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கோவில் உதவி ஆணையர் ரமேஷ் தெரிவித்தார்.