பதிவு செய்த நாள்
28
மார்
2020
05:03
முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ரூ 11 லட்சம் நிதி வழங்கினார். உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து மக்கள் விடுபட்டு, நலமுடன் வாழ தருமபுரம் ஆதீனம் சார்பில் அதன் 27 தேவஸ்தானங்களிலும் சிறப்பு யா கங்கள், கூட்டுவழிபாடு, திருமுறை பாராயணம் ஆகியவை நிகழ்த்தப்பட்டன. மேலும் சிறப்பாக செயல்பட்டு வரும் மத்திய, மாநில அரசுகளின் வேண்டுகோளுக்கு மக்கள், ஆன்மீ க அன்பர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று தர்மபுரம் ஆதீன குருமகா சன்னிதானம் அறிக்கையின் மூலம் வேண்டுகோள் விடுத்தார்கள். கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் சீரோடும், சிறப்போடும், மெய்வருத்தம் பாராமல், பசி நோக்காமல், கண் துஞ்சாமல், எந்திரமாய் பணியாற்றி வருகிறார் கள். அரசுக்கு இதனை சமாளிக்க பெரும் நிதி தேவைப்படுகிறது. இதற்காக தருமை ஆதினம் மற்றும் ஆதீனங்களின் சார்பாக ரூ11 லட்சம் நிதியை தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நேற்று வழங்கினார். மேலும் தருமபுரம் ஆதீ னம் குருமகா சன்னிதானம் மக்கள் சுயகட்டுப்பாட்டுடன், அரசு விதிகளை பின்பற்றி தாங்களும் பாதுகாப்பாக இருந்து நாட்டையும் பாதுகாக்க வேண்டும் என வேண்டுகோள் வி டுத்துள்ளதுடன், மக்கள் நோயின்றி தற்காத்து, தன் நாடுகாத்து வாழ ஸ்ரீ செந்தமிழ்ச் சொக்கன் திருவருளைச் சிந்திப்பதாக தெரிவித்தார்கள்.