காரைக்குடி: காரைக்குடி செஞ்சை பகுதி மக்கள் தங்கள்பகுதியில் கசாயம் வழங்கியும், வேப்பிலை மஞ்சள் தண்ணீர் தெளித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.காரைக்குடி செஞ்சை மக்கள் தங்களது சொந்தசெலவில், மிளகு, கிராம்பு, சித்தரத்தை, திப்பிலி உட்பட 15 வகையானமூலிகைகள் கலந்து கசாயம் காய்ச்சி அப்பகுதி மக்களுக்கு வழங்கினர்.மேலும், தண்ணீரில் வேப்பிலை அரைத்தும் மஞ்சள் கலந்து அனைத்துபகுதிகளிலும் தெளித்து வருகின்றனர்.அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில்;நமது முன்னோர்கள் கிருமிகளை அழிப்பதற்கு முக்கியமானபொருளாக மஞ்சள் மற்றும் வேப்பிலையை மட்டுமே பயன்படுத்தினர்.15 வகையான பொருட்கள் கலந்த கசாயம் மூலம், நோய் எதிர்ப்புசக்தி ஏற்படும் என்றனர்.