பதிவு செய்த நாள்
28
மார்
2020
05:03
மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி, புஞ்சைகாளமங்களம் கிராமத்தில், சின்னம்மாபுரம், காட்டூர், நஞ்சப்பகவுண்டன் புதூர் பகுதியில், 300 குடும்பத்தினர் வசிக்கின்றனர். கொரோனா வைரஸ் தடுப்பு ஊரடங்கு உத்தர வால், மக்கள் பீதியில் உள்ளனர். அரசு, சுகாதாரத்துறையின் அறிவுரைகளை பின்பற்றும் நிலையில், வீடுகள் முன்பாக சாணம் தெளித்தும், வீடுகளில் வேப்பிலையும் சொருகியுள்ளனர். வீதியில் நுழையும் பகுதிகளில், வேப்பிலைகளை தோரணமாக கட்டி தொங்க விட்டுள்ளனர். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை, வேப்பிலையை மாற்றுவதாக மக்கள் கூறுகின்றனர். வெளியில் சென்று வீடு திரும்ப நேரிட்டால், மஞ்சள் நீரில் கைகளை சுத்தம் செய்கிறோம். அம்மை உள்ளிட்ட கொள்ளை நோய் பரவும்போது, வீடுகளில் வேப்பிலை கட்டுவது வழக்கம். தற்போது கொரோனாவை விரட்ட, அந்த முறையை கடைபிடிக்கிறோம் என்று, மக்கள் கூறினர்.