Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

சிம்மம்: சாதனை படைக்கலாம் சந்தோஷமாய் வாழலாம் சிம்மம்: சாதனை படைக்கலாம் ... துலாம்: சனியின் சாதகத்தால் தொட்டது பொன்னாகும் துலாம்: சனியின் சாதகத்தால் தொட்டது ...
முதல் பக்கம் » தமிழ் புத்தாண்டு ராசிபலன்! (14.4.2020 முதல் 13.4. 2021 வரை)
கன்னி: மங்கள மேளம் கொட்டும் மனசெல்லாம் இதமாகும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஏப்
2020
17:43

கருணை மனம் படைத்த கன்னி ராசி அன்பர்களே!

புத்தாண்டின் தொடக்கத்தில் குருபகவான் குதுாகலத்தைக் கொடுப்பார். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். மங்கள மேளம் கொட்டும். மனதில் இதமான சந்தோஷம் ஏற்படும்.   பொருளாதார வளம் அதிகரிக்க செய்வார். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஜூலை7 முதல்  நவ.13 வரை அவரால் மன உளைச்சல், உறவினர் வகையில் வீண்பகை உருவாகும்.

சனீஸ்வரர்  வீண் விரோதத்தை ஏற்படுத்துவார். ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். டிச.26க்கு பிறகு குடும்பத்தில் பிரச்னைகளை உருவாக்குவார். ஆனால் அவரது 7ம் இடத்து பார்வையால் பொன், பொருள் சேரும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்கள் உறுதுணையாக செயல்படுவர்.  ராகுவால் பண இழப்பு, சிறு உடல் உபாதைகளையும் கொடுப்பார். ஆக 31-க்கு பிறகு அவரால் சிற்சில தடைகளை உருவாகலாம். எதிரிகளின் இடையூறு தலதூக்கும். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். கேதுவால் அவரால் சிலர் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதியுறலாம். உடல்நிலை பாதிப்பு வரலாம். ஆனால் ஆக. 31க்கு பிறகு அவர் கடவளின் அருளால் பொருள் உதவி கொடுப்பார். மேலும் உடல் உபாதைகளை குணமாக்குவார்.

 இந்த ஆண்டின் தொடக்கத்தில் புதிய வீடு வாங்கலாம். அல்லது தற்போது இருப்பதை விட வசதியான வீட்டிற்கு குடிபோகலாம். வண்டி வாகனங்கள் வாங்கலாம்.    வீட்டில் ஒற்றுமை ஏற்படும்.  உறவினர்கள் உங்களை நாடி வருவர். சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.ஜூலை 7-ந் தேதி முதல்  நவம்பர் 13-ந் தேதி வரை  அலைச்சல் இருக்கும். கணவன்- மனைவி இடையே அன்னி யோன்யமான சூழ்நிலை இருக்காது. குடும்பத்தில் சிற்சில பிரச்சினைகள் தலை தூக்கலாம்.  மதிப்பு மரியாதை சுமாராக இருக்கும்.  ஆகஸ்டு 31-ந் தேதிக்கு பிறகு கடவுனிள் கருணை உங்களுக்கு கிடைக்கும். மனதில் இருந்த உளைச்சல் அடியோடு நீங்கும். தேவையான பொருட்களை வாங்கலாம். குடும்பத்தில் கடந்த காலத்தைவிட மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள் கணவன்-மனைவி இடையே அன்பு, பாசம் இருக்கும்.

பெண்கள்: குதூகலமான பலனை காண்பர். கணவரின் அன்பும் கிடைக்கும், உங்கள் மூலம் குடும்பம் சிறக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான வளர்ச்சியை காண்பீர்கள். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு ஜூலை7-ந் தேதிக்கு பிறகு வீண் செலவு ஏற்படலாம். கவனமாக இருப்பது புத்திசாலித்தனம். ஆகஸ்டு 31-ந் தேதிக்கு பிறகு குடும்பத்தோடு புனித ஸ்தலங்களுக்குசென்று வருவீர்கள்.பெண் காவலர்களுக்கு புதிய பதவி தேடி வரும். பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். உடல்நலம் வயிறு பிரச்சினைவரும். பயணத்தின் போது சற்று கவனம் தேவை. ஆகஸ்டு 31-ந் தேதிக்கு பிறகு உடல் ஆரோக்கியம் மேம்படும்.உஷ்ண, பித்தம், மயக்கம், சளி போன்ற உபாதைகள் பூரண குணம் அடையும்.

சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்கள் ஆண்டு முழுவதும் பெண்களுக்கு சாதகமான திசையில் காற்று வீசுவதால் முக்கிய பொறுப்புகளை அவர்கள் வசம் ஒப்படையுங்கள். ஆக. 31க்கு பிறகு புதிய தொழில் அனுகூலம் கொடுக்கும்.
* ஆன்மிக சம்பந்தபட்ட மற்றும் பூஜை பொருள்கள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபம் காண்பர். பகைவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் பெறும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும்.
* வியாபாரிகளுக்கு வருமானம் அதிகரிக்கும். தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். டிச.26க்கு பிறகு புதிய வியாபாரத்தை மேற்கொள்ளலாம். வாடிக்கையாளர்களின் ஆதரவால் வ இருப்பர். வெளியூர் பயணம் சிறப்பை தரும். அச்சகம், பத்திரிகை, பப்ளிகேசன், இரும்பு ,கட்டுமான ஆலோசகர் போன்ற தொழில் நல்ல வளர்ச்சியை அடையும். வேலை இன்றி இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் புதிய தொழில் ஆரம்பிக்கலாம்.எதிரிகளால் இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும்.
* தரகு, கமிஷன் தொழில் ஆக.31க்கு பிறகு நன்கு வளர்ச்சி பெறும். எதிரிகளின் இடையூறு மறையும். தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கியவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவர்.  வருமானம் அதிகரிக்கும்.
* தனியார் துறையினருக்கு கோரிக்கைகள் நிறைவேறும். மேலதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும். விருப்பமான இடத்துக்கு மாற்றம் கிடைக்கும். வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும்.
* ஐ.டி., துறையினருக்கு சகபெண் ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர். நவ.13க்கு பிறகு சிலர் இழந்த பதவியை மீண்டும் கிடைக்க பெறுவர். இடமாற்ற பீதி மறையும்.
* மருத்துவர்கள் ஆக.31க்கு பிறகு சிலர் அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். உங்கள் ஆற்றல் மேம்படும்.
* வக்கீல்கள் டிச.26க்கு பிறகு தாங்கள் நடத்தும் வழ சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
* ஆசிரியர்கள் வேலையில் திருப்தி காண்பர். நவ.13-ந்க்கு பிறகு சிலருக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கலாம். கோரிக்கைகள் நிறைவேறும். அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி எளிதில் கிடைக்கும்.
* போலீஸ், ராணுவத்தினர் ஆக .31ஆகஸ்டு 31-நக்கு பிறகு உயர்ந்த நிலையை அடைவர். புதிய பதவி கிடைக்கும்.  வேலைப்பளு குறையும். பதவிஉயர்வு கிடைக்கும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும்.
* அரசியல்வாதிகள் ஆக. 31-ந் க்கு பிறகு நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள். எதிர்பார்த்த பதவி வந்து சேரும்.
* பொதுநல சேவகர்கள் மேம்பாடு அடைவர்.நற்பெயர் கிடைக்க பெறலாம். புகழ் வளர்முகமாகவே இருக்கும்.
* கலைஞர்கள் ஆடம்பர வசதியுடன் வாழ்வர் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். புகழ், பாராட்டு தேடி வரும்.
* விவசாயிகள் ஜூலை 7-ந் தேதி வரை நெல், சோளம், மஞ்சள் போன்ற வகைகளில் அதிக மகசூல் கிடைக்கும். ஆகஸ்டு 31க்கு பிறகு புதிய சொத்து வாங்கும் வண்ணம் கைகூடும்.  நவீன இயந்திரம் வாங்க வாய்ப்புண்டு. வழக்கு. விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.  பக்கத்து ; வகையில் இருந்த தொல்லைகள் மறையும்.
 கால்நடை செல்வம் பெருகும். பால்பண்ணை மூலமும் நல்ல வருமானம் கிடைக்கும். ஆக.31க்கு பிறகு கா, வகையில் எதிர்பார்த்த பலனை பெறலாம்.
   பள்ளி, கலலுாரி மாணவர்கள் கல்வியில் நல்ல வளத்தை காணலாம். ஆசிரியர்களின் ஆலோசனை வளர்ச்சிக்கு துணைநிற்கும். தேர்வில் மதிப்பெண் கூடுதலாக கிடைக்கும். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். சிலர் வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பை பெறுவர்.
   
சுமாரான பலன்கள்
* அரசு பணியாளர்களுக்கு ஜூலை 7 முதல் நவ.13 வரை எதிலும் விடாமுயற்சி தேவை. எதிர்பார்த்த மதிப்பு, பாராட்டு  கிடைக்காமல் போகலாம்.
* தனியார் துறையினருக்கு ஜூலை 7 முதல்  நவ.13 வரை வேலைப்பளு அதிகரிக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காமல் போகலாம். முக்கிய பொறுப்புகளை பிறரை நம்பி ஒப்படைக்க வேண்டாம்.
* மருத்துவர்களுக்கு வரவேண்டிய பொறுப்பு தட்டிப் பறிக்கப்படலாம். பொறுமையுடன் விட்டுக் கொடுப்பது அவசியம்.
* தரகு, கமிஷன் தொழிலில் ஜூலை7க்கு பிறகு கடின உழைப்பு தேவைப்படும். எதிரி பற்றி அசட்டையாக இருக்க வேண்டாம்.

பரிகாரம்;
* சனிக்கிழமை சனீஸ்வரருக்கு எள்தீபம்
* வெள்ளிக்கிழமையில் துர்க்கை வழிபாடு
* அஷ்டமியன்று பைரவருக்கு வடைமாலை

 
மேலும் தமிழ் புத்தாண்டு ராசிபலன்! (14.4.2020 முதல் 13.4. 2021 வரை) »
temple
பெற்றோர் மீது அன்பு கொண்ட மேஷ ராசி அன்பர்களே! இந்த சார்வரி ஆண்டின் தொடக்கத்தில் குரு, சனி பார்வைகளால் ... மேலும்
 
temple
திட்டமிட்டு செயல்படும் ரிஷப ராசி அன்பர்களே! இந்த சார்வரி ஆண்டின் தொடக்கத்தில் குருவால் மகிழ்ச்சி ... மேலும்
 
temple
மற்றவர் கருத்துக்கு மதிப்பளிக்கும் மிதுன ராசி அன்பர்களே! சார்வரி ஆண்டின் தொடக்கத்தில் குருபகவான் மன ... மேலும்
 
temple
கடமையை கண்ணாக மதிக்கும் கடக ராசி அன்பர்களே! இந்த சார்வரி ஆண்டு சிறப்பானதாக அமையும். காரணம் சனி, கேது ... மேலும்
 
temple
பொன்மனம் படைத்த சிம்ம ராசி அன்பர்களே! இந்த சார்வரி ஆண்டு ராகு சாதமாக இருக்கும் நிலையில் பிறக்கிறது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.