Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

கடகம்: அமோக வாழ்வு தருவார் ஆறாமிடத்து சனி கடகம்: அமோக வாழ்வு தருவார் ... கன்னி: மங்கள மேளம் கொட்டும் மனசெல்லாம் இதமாகும் கன்னி: மங்கள மேளம் கொட்டும் ...
முதல் பக்கம் » தமிழ் புத்தாண்டு ராசிபலன்! (14.4.2020 முதல் 13.4. 2021 வரை)
சிம்மம்: சாதனை படைக்கலாம் சந்தோஷமாய் வாழலாம்
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஏப்
2020
17:28

பொன்மனம் படைத்த சிம்ம ராசி அன்பர்களே!

இந்த சார்வரி ஆண்டு ராகு சாதமாக இருக்கும் நிலையில் பிறக்கிறது. இதனால் பொன், பொருள் சேரும். மகிழ்ச்சி மனதில் நிலைக்கும். பெண்கள் உறுதுணையாக  இருப்பர். சாதனை படைத்து சந்தோஷமாக வாழ்வீர்கள். ஆக.31க்கு பிறகு சிலர் பொல்லாப்பை சந்திக்க நேரிடலாம். பெண்கள் வகையில் இடையூறுகள் வரலாம்.


கேதுவால் அரசு வகையில் பிரச்னை குறுக்கிடலாம். சிலருக்கு திருட்டு பயமும் ஏற்படலாம். ஆக.31க்கு பிறகு தீயோர் சேர்க்கைக்கு ஆளாக நேரலாம்.  ஆனால் எந்த பிரச்னையையும் முறியடிக்கும் வல்லமை உண்டாகும். சனிபகவானால்  மனைவி, மக்கள் மத்தியில் குழப்பம் உருவாகலாம். மனதில் இனம் புரியாத வேதனை குடியேறலாம். டிச.26க்கு பிறகு  நல்ல பணப்புழக்கத்தையும், செயலில் வெற்றியையும் கொடுப்பார். அபார ஆற்றல் பிறக்கும். எதிரிகளை இருக்கும் இடம் தெரியாமல் ஆக்குவீர்கள். சனியின் 10-ம் இடத்துப்பார்வையின் மூலம் பொருளாதார வளத்தையும், தொழிலில் முன்னேற்றத்தையும் கொடுப்பார்.

குருவால் மனதில் தளர்ச்சி ஏற்படும். ஆனால் ஜூலை 7 முதல்  நவ.13 வரை குரு குடும்பத்தில் குதூகலத்தை கொடுப்பார்.திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பெண்களால் மேன்மை கிடைக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடம்பர பொருட்களை வாங்கலாம்.குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். கணவன், மனைவி இடையே அன்பு பெருகும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உறவினர்கள் வகைகளில் கருத்து வேறுபாடு நிலவும். சிலர் புதிய வாகனம் வாங்கலாம். குருவின் 5 மற்றும் 7-ம் இடத்துப்பார்வைகள் சிறப்பாக உள்ளன.  இதனால் நினைத்ததை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தி ஆகும்.


பெண்கள் ஆடம்பர செலவை தவிர்க்கவும். ஜூலை 7க்கு பிறகு தடைபட்ட திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். பிரிந்த குடும்பம் நிரந்தரமாக ஒன்று சேரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சகோதரிகள் ஆதரவுடன் செயல்படுவர். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். புதிய பதவி தேடி வரும். நவ.13க்கு பிறகு குடும்பத் தேவைக்காக அதிகமாக பாடுபட வேண்டியதிருக்கும். அக்கம் பக்கத்தினர் வகையில் தொல்லைகள் இடர்பாடுகள் வரலாம். உடல்நலம் சிறப்பாக இருக்கும். மருத்துவச் செலவு குறையும். ஆக.31க்கு பிறகு கேதுவால் சிற்சில உபாதைகள் வரலாம்.

சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்கள் பெண்களை பங்கு தாரராக கொண்ட தொழில் வளர்ச்சி பெறும். டிச.26க்கு பிறகு தொழில் வளர்முகமாக இருக்கும். லாபத்திற்கு குறைவிருக்காது. எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும். வெளியூர் பயணம் மேற்கொண்டாலும் அது அனுகூலமான பலனைத் தரும்.
* வியாபாரிகளுக்கு ஜூலை 7க்கு பிறகு ஆற்றல் மேம்படும். பத்திரிகை தொழில், தானிய வியாபாரம், தங்கம், மற்றும் உலோக வியாபாரம் சிறப்பாக இருக்கும். வங்கிக்கடன் எளிதாக கிடைக்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை பலப்படும். ஜூலை 7 முதல்  நவ.13 வரை தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர்.
* தரகு, கமிஷன் தொழிலில் தடைகள் அனைத்தும் விலகும். பணப்புழக்கத்துக்கு குறைவிருக்காது. சமூகத்தில் மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும்.
* அரசு பணியாளர்கள் ஜூலை 7 முதல் நவ.13வரை சிலர் இழந்த பதவியை மீண்டும் கிடைக்கப் பெறுவர். அல்லது  விரும்பிய இடத்துக்கு மாற்றல் கிடைக்கப் பெறலாம். மேலதிகாரிகள் அனுசரணையாக இருப்பர். சிலர் அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர்.
* தனியார் துறை பணியாளர்களுக்கு  குருவின் பார்வைகள் சிறப்பாக உள்ளன.  இதனால் உத்தியோகம் சிறப்படையும். புதிய பதவி கிடைக்கும். மனமகிழ்ச்சி அதிகரிக்கும். வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புண்டு.
* ஐ.டி., துறையினருக்கு ஜூலை 7 முதல் நவ.13 வரை செல்வாக்கு மேம்படும். சக பெண் ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர்.
* மருத்துவர்கள் ஜூலை 7க்கு பிறகு  கடந்த காலத்தில் இருந்தது போன்ற மிகவும் பின்தங்கிய நிலை இருக்காது.
* வக்கீல்களுக்கு டிச.26க்கு பிறகு வழக்கு, விவகாரங்கள் சாதகமாக அமைய வாய்ப்புண்டு. தாங்கள் நடத்தும் வழக்குகள் சிறப்பாக இருக்கும். சாதகமான தீர்ப்பும் கிடைக்கும்.
* ஆசிரியர்கள் ஜூலை 7 முதல்  நவ.13 வரை சிறப்பான முன்னேற்றத்தை காண்பர். வேலைப்பளு குறையும்.  பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். இடமாற்ற பீதி மறையும்.
* அரசியல்வாதிகள் சீரான முன்னேற்றம் காண்பர். பதவிஉயர்வு கிடைக்க வாய்ப்புண்டு.
* கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். சிறப்பான வருமானம் இருக்கும். அரசிடம் இருந்து விருது, பாராட்டு போன்றவை கிடைக்கும்.
*  விவசாயிகளுக்கு பாசிப்பயறு, நெல், எள், உளுந்து, கொண்டைக்கடலை, மஞ்சள், பழ வகைகள் மூலம் வருமானம் அதிகரிக்கும். நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வளம் காண்பர். புதிய சொத்து வாங்குவதற்கான காலம் கனிந்து வரும். டிச. 26க்கு பிறகு வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு  வரும். கை விட்டுப் போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.
ஜூலை 7க்கு பிறகு பால்பண்ணை மூலம் நல்ல வருமானம் கிடைக்கும்.
* பள்ளி, கல்லுாரி மாணவர்கள் ஆசிரியரின் ஆலோசனையால் நன்மை காண்பர்.  ஜூலை7 க்கு பிறகு குருவால் சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் ஏற்படும்.
   
சுமாரான பலன்கள்
* தொழிலதிபர்கள் ஆக.31க்கு பிறகு  பண இழப்பை சந்திக்க நேரலாம் கவனம். முக்கிய பொறுப்பு, பணத்தை பிறரை ஒப்படைக்க வேண்டாம்.
* ஐ.டி. துறையினருக்கு நவ.11க்கு பிறகு வேலைப்பளு அதிகரிக்கும். அலைச்சல் இருக்கும். இடமாற்றம் ஏற்படும். சிலர் வேலையில் அதிக ஆர்வம் இல்லாமல் இருக்கலாம்.
* அரசு பணியாளர்கள் மேலதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். சிலருக்கு எதிர்பாராத வகையில் இடமாற்றம் ஏற்படலாம். வழக்கமாக கிடைக்க வேண்டிய பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கு தடையேதும் இல்லை.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் ஆக.31க்கு பிறகு சக ஊழியர்களிடம் இருந்து எந்த உதவியும் எதிர்பார்க்க முடியாது. சிலருக்கு விருப்பமில்லாத இடமாற்றத்தைச் சந்திப்பர்.
* அரசியல்வாதிகள் ஆக.31க்கு பிறகு பிரதிபலன் எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும். பெண்கள் வகையில் தொல்லைகள் வரலாம்.
* பொதுநல சேவகர்களுக்கு நவ.11க்கு பிறகு சமூகத்தில் மதிப்பு, மரியாதை சுமாராக இருக்கும். எனவே வீண் விவாதங்களை தவிர்க்கவும். அனாவசிய செலவும் ஏற்பட வாய்ப்புண்டு.
* கலைஞர்கள் நவ.11க்கு பிறகு புதிய ஒப்பந்தம் பெற கடின முயற்சி தேவைப்படும்.  எதிர்பார்த்த விருது பாராட்டு கிடைக்காமல் போகலாம்.
* பள்ளி,கல்லுாரி மாணவர்கள் நவ.11க்கு பிறகு தீவிர முயற்சி எடுப்பது அவசியம்.  சிலர் தகாத சேர்க்கையால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம்.
 
பரிகாரம்
* வெள்ளிக்கிழமையன்று துர்க்கை வழிபாடு
* செவ்வாயன்று முருகனுக்கு பாலபிேஷகம்
* வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை

 
மேலும் தமிழ் புத்தாண்டு ராசிபலன்! (14.4.2020 முதல் 13.4. 2021 வரை) »
temple
பெற்றோர் மீது அன்பு கொண்ட மேஷ ராசி அன்பர்களே! இந்த சார்வரி ஆண்டின் தொடக்கத்தில் குரு, சனி பார்வைகளால் ... மேலும்
 
temple
திட்டமிட்டு செயல்படும் ரிஷப ராசி அன்பர்களே! இந்த சார்வரி ஆண்டின் தொடக்கத்தில் குருவால் மகிழ்ச்சி ... மேலும்
 
temple
மற்றவர் கருத்துக்கு மதிப்பளிக்கும் மிதுன ராசி அன்பர்களே! சார்வரி ஆண்டின் தொடக்கத்தில் குருபகவான் மன ... மேலும்
 
temple
கடமையை கண்ணாக மதிக்கும் கடக ராசி அன்பர்களே! இந்த சார்வரி ஆண்டு சிறப்பானதாக அமையும். காரணம் சனி, கேது ... மேலும்
 
temple
கருணை மனம் படைத்த கன்னி ராசி அன்பர்களே! புத்தாண்டின் தொடக்கத்தில் குருபகவான் குதுாகலத்தைக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.