Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
மகரம்: ராஜயோகம் தருவார் ராகுபகவான் மகரம்: ராஜயோகம் தருவார் ராகுபகவான் மீனம்: கடன் வாங்கினாலும் கனவெல்லாம் நனவாகும் மீனம்: கடன் வாங்கினாலும் கனவெல்லாம் ...
முதல் பக்கம் » தமிழ் புத்தாண்டு ராசிபலன்! (14.4.2021 முதல் 13.4. 2022 வரை)
கும்பம்: லாப ஸ்தானத்தில் சனி பணமழை கொட்டும்
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஏப்
2020
14:50

நல்லவர் நட்பை நாடும் கும்ப ராசி அன்பர்களே!

இந்த சார்வரி ஆண்டு சனி பகவான், கேது சாதகமாக இருக்கும் நிலையில் பிறக்கிறது. அவர்கள் சாதகமாக இருந்து பல்வேறு நன்மைகளை தருவர். செயலில் அனுகூலத்தைக் கொடுப்பார்கள். சனிபகவானால் பொன், பொருள் சேரும். மனதில் மகிழ்ச்சி  அதிகரிக்கும். பெண்களால் முன்னேற்றம் காணலாம். உங்களுக்கு இது மிகவும் சிறப்பான காலம். டிச.26க்கு பிறகு அவரால்  நற்பலனை கொடுக்க முடியாது.  பொருளாதார இழப்பு வரலாம். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். எதிரிகளின் இடையூறு அவ்வப்போது வரலாம். ஆனால் அவரது  7ம் இடத்து பார்வை மூலம் அவர் நல்ல  வளத்தைக் கொடுப்பார். பகைவர்களை எதிர்கொள்ளும் ஆற்றல் பிறக்கும். முயற்சியில் வெற்றியை தருவார். அபார ஆற்றல் உண்டாகும்.

கேது  நல்ல வளத்தையும், ஆரோக்கியத்தையும் கொடுப்பார். குடும்பத்தில் மேன்மையைத் தருவார். எடுத்த முயற்சியை வெற்றிகரமாக முடிக்கும் ஆற்றலைக் கொடுப்பார். ஆக.31க்கு பிறகு அவரால் சிலரது வீட்டில் பொருள் களவு போக வாய்ப்புண்டு. பயணத்தின் போது கவனம் தேவை. ராகுவால்  பிரச்னையை உருவாக்கலாம். மனதில் இனம் புரியாத வேதனை ஆட்டிப் படைக்கலாம். ஆக.31க்கு பிறகு அவரால் வீண் அலைச்சல், பிரச்னையை உருவாக்கலாம்.  குருவால் மனதில் வருத்தம் உருவாகலாம். வீண் அலைச்சல் ஏற்படும். ஜூலை 7 முதல் நவ.13 வரை அவரால் நன்மை காணலாம். பொருளாதார வளம் மேம்படும். இது தவிர அவரது 7,9-ம் இடத்துப்பார்வைகள் மூலம் நற்பலன் கிடைக்கும்.

குடும்பம் எந்த தடைகளையும் முறியடிக்கும் வல்லமையை பெறுவீர்கள். செல்வாக்கு கூடும். ஜூலை7க்கு பிறகு குடும்பம் மேன்மை அடையும். தேவைகள் பூர்த்தியாகும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். கணவன், மனைவி இடையே அன்பு பெருகும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். புதிய வீடு கட்டலாம். புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். சகோதரிகள் ஆதரவுடன் இருப்பர். உறவினர் வகையில் இருந்த கருத்து வேறுபாடு மறையும். நவ.13க்கு பிறகு குழப்பம் நிலவும். கணவன், மனைவி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும்.


பெண்கள்  குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. ஜூலை7க்கு பிறகு மனமகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகம் பிறக்கும். தோழிகள் உதவிகரமாக செயல்படுவர். குடும்பத்தில் இருந்த பின்னடைவுகள் மறையும். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு.  தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக செயல்படுவர்.  உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். சுய தொழில் புரியும் பெண்களுக்கு வங்கிக்கடன் எளிதாக கிடைக்கும். நவ.13க்கு பிறகு குடும்பத்தில் விட்டுக்கொடுத்து போவது நல்லது. இல்லையென்றால் வீண்மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். உடல் உபாதைகள் பூரண குணம் அடையும். ஆக.31க்கு பிறகு உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம். பயணத்தின் போது கவனம் தேவை.

சிறப்பான பலன்கள்

* தொழிலதிபர்களுக்கு லாபம் அதிகரிக்கும். வீண் விரயம் தடைபடும். புதிய தொழில் முயற்சியில் அனுகூலம் ஏற்படும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம்  நல்ல முன்னேற்றம் பெறும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். கூட்டாளிகள் இடையே ஒற்றுமை ஏற்படும். பகைவர் இடையூறு அவ்வப்போது தலைதுாக்கினாலும் அதை எளிதில் முறியடிப்பீர்கள். வணிகம் விஷயமாக வெளிநாட்டுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.
* வியாபாரிகள் ஜூலை7க்கு பிறகு தொழில் ரீதியாக வெளியூர் பயணம் சென்றவர்கள் ஆதாயத்துடன் திரும்புவர். தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர்.
* அரசு பணியாளர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு.  நண்பர்கள் உதவிகரமாக இருப்பர்.
*  தனியார் துறையில் பணிபுரிவோருக்கு ஜூலை7 க்கு பிறகு பின்தங்கிய நிலை மறையும். வேலைப்பளு குறையும். வீண் அலைச்சல் இருக்காது. வேலை விஷயமாக குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேர்வர். புதிய பதவி வர வாய்ப்புண்டு
* ஐ.டி., துறையினர் முன்னேற்றத்தை காண்பர். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை நவ.13க்குள் கேட்டு பெற்று கொள்ளவும்.
* மருத்துவர்கள் மக்கள் உங்களிடம் நன்மதிப்பை வைத்திருப்பர். அரசிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
* வக்கீல்கள் தாங்கள் நடத்தும் வழக்குகளில் வெற்றி காண்பர். சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
* ஆசிரியர்களுக்கு ஜூலை 7 முதல்  நவ.13 வரை  முயற்சியில் இருந்த தடைகள் விலகும்.வேலையில் இருந்த வெறுப்புணர்வு மாறி ஆர்வம் பிறக்கும். வேலையில் திருப்தியும், தன்னம்பிக்கையும் பிறக்கும். நல்ல பணப்புழக்கம் ஏற்படும்.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் சிறப்பான பலன்களை எதிர்நோக்கலாம். உங்கள் அதிகாரம் கொடிகட்டி பறக்கும்.சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் வந்து சேரும். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை ஆக. 31க்குள் கேட்டு பெறவும்.
* அரசியல்வாதிகள் மேம்பாடு அடைவர். பதவியும், பணமும் கிடைக்கும்.
* பொதுநல சேவகர்கள் எதிர்பார்த்த பொறுப்பு, பாராட்டு, விருது போன்றவை கிடைக்கும்.
* கலைஞர்களுக்கு ஜூலை7 க்கு பிறகு புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர்.
* விவசாயிகள் திருப்திகரமான வருமானம் கிடைக்கப் பெறுவர். சிலர் புதிய சொத்து வாங்குவர். பக்கத்து நிலத்துக்காரர்கள் உதவிகரமாக இருப்பர். வழக்கு விவகாரங்களில் சாதகமான முடிவு இருக்கும். ஜூலை7க்கு பிறகு கால்நடை செல்வம் பெருகும்.  * பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பிற்போக்கான நிலை இருக்காது. கெட்ட மாணவர்களின் சகவாசத்தினால் அலைக்கழிந்தவர்கள் ஜூலை7க்கு பிறகு சிறப்பான பலனை காணலாம். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர்.   

சுமாரான பலன்கள்
* மருத்துவர்களுக்கு ஆக. 31க்கு பிறகு வேலைப்பளு இருக்கும். வேலையில் அதிக அக்கறையுடன் இருக்கவும். சிலருக்கு திடீர் இடமாற்றம் ஏற்படலாம்.
* வக்கீல்கள் டிச.26க்கு பிறகு அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். புதிய வழக்குகள் நடத்தும் போது  கவனம் தேவை.
* ஆசிரியர்களுக்கு நவ.14க்கு பிறகு மனதில் தளர்ச்சி ஏற்படலாம்.
* வியாபாரிகள் டிச.26க்கு பிறகு லாபம் கிடைக்க அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். நமக்கு ஏது எதிரி என்று அசட்டையாக இருந்து விடாதீர்கள்.
* தரகு,கமிஷன் தொழில் டிச.26க்கு பிறகு தொழிலில் போட்டி உருவாகும். நல்லவர் போல் பழகி உங்களை மோசடி செய்ய சிலர் முயற்சிக்கலாம்.  எனவே யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம்.
* கலைஞர்கள் நவ.14க்கு பிறகு புதிய ஒப்பந்தம் பெற தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும்.

பரிகாரம்
* ஞாயிறன்று ராகு காலத்தில் பைரவர் வழிபாடு
* வியாழனன்று குருபகவானுக்கு அர்ச்சனை
* பவுர்ணமியன்று மாரியம்மனுக்கு நெய்தீபம்.          

 
மேலும் தமிழ் புத்தாண்டு ராசிபலன்! (14.4.2021 முதல் 13.4. 2022 வரை) »
temple
அசுவினி : வேலை வாய்ப்புகள் தேடி வரும். பொதுவாக குருபார்வை முக்கிய இடங்களுக்கு இருப்பதால் விவேகமாக ... மேலும்
 
temple
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: நிறையப் பண வரவு இருக்கும். குருபகவான் ராசிக்கு 9 - ம் வீட்டில் அமர்ந்திருக்கும் ... மேலும்
 
temple
மிருகசீரிடம், 3,4 ம் பாதம்: இனிமையான அனுபவங்களைப் பெறுவீர்கள் பொதுவாக வெளிநாட்டு தொடர்புடைய நன்மைகள் ... மேலும்
 
temple
புனர்பூசம்,4 ம் பாதம்: நிதி நிலைமை அமோகமாக இருக்கும்பொதுவாக பல பாக்கியங்கள் கிடைக்கக் கூடிய ஆண்டாக ... மேலும்
 
temple
மகம்: இயல்பை விடச் சிறப்பாக இருக்கும்.பொதுவாக இந்த  புத்தாண்டு சென்ற ஆண்டைவிட சிறப்பாக இருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.