Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

தனுசு: குரு பலத்தால் சனிபாதிப்பு குறையும் தனுசு: குரு பலத்தால் சனிபாதிப்பு ... கும்பம்: லாப ஸ்தானத்தில் சனி பணமழை கொட்டும் கும்பம்: லாப ஸ்தானத்தில் சனி பணமழை ...
முதல் பக்கம் » தமிழ் புத்தாண்டு ராசிபலன்! (14.4.2021 முதல் 13.4. 2022 வரை)
மகரம்: ராஜயோகம் தருவார் ராகுபகவான்
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஏப்
2020
14:46

பிறருக்கு தீங்கு நினைக்காத மகர ராசி அன்பர்களே!
சார்வரி ஆண்டு ராகு சாதகமாக இருக்கும் நிலையில் பிறக்கிறது. அவரால் வாழ்வில் ராஜயோகம் உண்டாகும். செயலில் அனுகூலத்தைக் கொடுப்பார். அவர் உங்களை தீயோர் சேர்க்கையில் இருந்து விடுவித்து முன்னேற்றத்துக்கு வழிவகுப்பார். ஆக.31க்கு பிறகு அவர் இன்னல்களையும், இடையூறுகளையும் தரலாம். மனைவி, மக்கள் மத்தியில் குழப்பத்தை உருவாக்கலாம். மனதில் இனம் புரியாத வேதனை இருக்கலாம். கேதுவால் பொருள் விரயம் ஏற்படலாம். உடல் உபாதைகள் வரலாம். ஆக.31க்கு பிறகு.அவர் நல்ல வளத்தையும் ஆரோக்கியத்தையும் கொடுப்பார். குடும்பத்தில் மேன்மை உண்டாகும். எடுத்த முயற்சியை வெற்றிகரமாக முடிக்கும் ஆற்றலைக் கொடுப்பார். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.    
குருபகவான் சுமாரான பலன்களை தந்தாலும் அவரின் அனைத்து பார்வைகளும் சிறப்பாக அமைந்துள்ளன. எந்த பிரச்னையையும் முறியடித்து வெற்றிக்கு வழி காணலாம். ஜூலை 7 முதல் நவ.13 வரை அவரால் விரயம், தொல்லை, மனவருத்தம் உண்டாகும். வீண் அலைச்சல் ஏற்படும்.
 சனி பகவானால் பொருளாதார இழப்பு வரலாம். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். எதிரிகளின் இடையூறு அவ்வப்போது வரலாம். ஆனால் அவரின் 7ம் இடத்து பார்வை மூலம் நன்மை காண்பீர்கள். பகைவரை எதிர்க்கும் ஆற்றல் கிடைக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உங்கள் ஆற்றல் மேம்படும். டிச.26க்கு பிறகு உடல்நலம் பாதிக்கப்படலாம், உறவினர் வகையில் வீண்மனக்கசப்பு வரலாம். வெளியூரில் தங்க நேரிடும். ஆனால் அவரது 3-ம் இடத்துப்பார்வையால் அவர்  பொருளாதார வளம் சிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், தொழிலில் விருத்தியும் தருவார்.

சகோதரிகளால் பொன், பொருள் சேரும். உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். திருமணம் போன்ற சுபநிகழ்வுகள் கைகூடும். கணவன், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை இருக்கும். வீட்டில் குதுாகலமான பலன்களை காணலாம்.  ஜூலை 7 முதல் நவ.13 வரை வீண் விவாதங்களை தவிர்க்கவும். உறவினர் வகையில் கருத்துவேறுபாடு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். சிலர் தொழில் விஷயமாக குடும்பத்தை வெளியூர் மாற்ற வேண்டியதிருக்கும். ஆக.31க்கு பிறகு புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் கூடி வரும்.
பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். அவர்களால் குடும்பம் சிறப்பு அடையும். பொன், பொருள் சேரும். சகோதரர் உறுதுணையாக  இருப்பர். குருபகவானின்  பார்வையால் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். ஜூலை7 க்கு பிறகு பொறுமையாகவும், விட்டுக் கொடுத்து போகவும். ஆக.31க்கு பிறகு பிறந்த வீட்டு சொத்துகள் கிடைக்க வாய்ப்புண்டு. புத்தாடை,  அணிகலன்கள் வாங்க யோகமுண்டாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
உடல்நலம் திருப்தியளிக்கும். ஆக. 31க்கு பிறகு நோயால் அவதிப்பட்டவர்கள் பூரண குணம் பெறுவர். நீண்ட காலமாக  சிகிச்சை பெற்றவர்கள் வீடு திரும்புவர்.

சிறப்பான பலன்கள்

* தொழிலதிபர்களுக்கு ராகுவால் முயற்சியில் வெற்றி கிடைக்கும். பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமை பெறுவர்.  உங்கள் ஆற்றல் மேம்படும்.ஆக. 31க்கு பிறகு முன்னேற்றம் காணலாம். இடையூறை முறியடிப்பீர்கள். தொழில் விஷயமாக வெளியூர் சென்றவர்கள் வீடு திரும்புவர். பெண்களால் நன்மை உண்டாகும். மனைவி பெயரில் உள்ள தொழில் சிறப்படையும்.
* வியாபாரிகளுக்கு வெளியூர் பயணம் சாதக பலனைக் கொடுக்கும். பகைவர்களை வெற்றி கொள்வீர்கள். பெண்கள் வகையில் இருந்த பிரச்னை, இடர்பாடுகள் மறையும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் அடையும்.
* தரகு, கமிஷன் தொழில் சிறப்பாக நடக்கும். ஆக. 31-நக்கு பிறகு எதிர்பாராத வகையில் பணவரவு கிடைக்கும்.
* தனியார் துறை பணியாளர்கள் திருப்திகரமான நிலையில் இருப்பர். எதிர்பார்த்த நன்மைகள் நடந்தேறும். பதவி உயர்வு,  சம்பள உயர்வு கிடைக்கும். நவ.13க்கு பிறகுவேலை இன்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். சிலர் பக்கத்தொழில் செய்து வருமானத்தை பெருக்குவர்.
* மருத்துவர்கள் பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபட்டு நல்ல வருமானத்தைக் காணலாம்.
* வக்கீல்கள் உற்சாகத்துடன் செயல்படுவர். குடும்ப பிரச்னையை மறந்து தொழில் செய்தால் முன்னேற்றம் காணலாம்.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு ஆகஸ்டு31க்கு பிறகு பெண்கள் வகையில் உதவிகள் கிடைக்கும். விரும்பிய இடத்துக்கு மாற்றம் கிடைக்கப் பெறலாம்.
* அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி கிடைக்கும். ஆக.31க்கு பிறகு பிரச்னையை முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம். இதனால் மனதில் துணிச்சல் பிறக்கும். பணவரவு கூடும்.
* பொதுநல சேவகர்கள் பெண்கள் மூலம் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவர். அரசிடம் இருந்து விருது, பாராட்டு போன்றவை கிடைக்கும்.
* கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் மளமள என எளிதில் கையெழுத்தாகும்.
* விவசாயிகள் நல்ல வருமானத்தோடு காணப்படுவர். எதிர்பார்த்ததை விட மகசூல் அதிகரிக்கும். குறிப்பாக நெல், உளுந்து, கொள்ளு, கேழ்வரகு மற்றும் பயறுவகைகளில் அதிக லாபம் கிடைக்கும்.  புதிய சொத்து வாங்கும் எண்ணம் நிறைவேறும். பக்கத்து நிலத்துக்காரர்கள் உதவிகரமாக இருப்பர். புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மகசூலை பெருக்குவர்.  நவீன இயந்திரங்கள் வாங்க வாய்ப்புண்டு.  வழக்கு, விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
கால்நடை வகையில் எதிர்பார்த்த லாபம் வரும்.
* பள்ளி, கல்லுாரி மாணவர்கள் கல்வியில் சிறப்பான நிலை அடைவர். ஆசிரியர்களின் ஆலோசனையால் போட்டிகளில் வெற்றி காணலாம்.

சுமாரான பலன்கள்
* தொழிலதிபர்கள் அரசின் சோதனைக்கு ஆளாகலாம்.  சற்று கவனமாக இருக்க வேண்டும். டிச.26க்கு பிறகு சிலர் தொழில் விஷயமாக குடும்பத்தை விட்டு பிரிய வேண்டியதிருக்கும்.
* அரசு பணியாளர்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்தவும். அதிகமாக உழைக்க வேண்டும்.
* தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு ஜூலை 7 முதல் நவ.13 வரை வேலைப்பளுவும், அலைச்சலும் இருக்கும். வேலையில் சற்று பின்தங்கிய நிலை ஏற்படலாம்.
* ஐ.டி., துறையினர் கடந்த காலத்தை போல் நற்பலனை எதிர்பார்க்க முடியாது. வேலைப்பளு அதிகரிக்கும். அலைச்சல் கூடும். அதே நேரம் உழைப்பு வீணாகாது.
* ஆசிரியர்களுக்கு வர வேண்டிய பதவி உயர்வு தட்டிப் பறிக்கப்படலாம். பொறுமையும், விட்டுக் கொடுக்கும் குணமும் தேவை. மேலதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். முக்கிய வேலைகளை வேறு நபரிடம் ஒப்படைக்க வேண்டாம்.
* கலைஞர்களுக்கு  ஜூலை 7 முதல்  நவ.13 வரை  அக்கறை தேவை. எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைப்பதில் தாமதம் ஆகலாம்.
* பள்ளி, கல்லுாரி மாணவர்கள் ஜூலை 7 பிறகு சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும்.

பரிகாரம்:
* வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை
* பிரதோஷத்தன்று நந்தீஸ்வரருக்கு நெய்தீபம்
* ஏகாதசியன்று பெருமாளுக்கு துளசி மாலை

 
மேலும் தமிழ் புத்தாண்டு ராசிபலன்! (14.4.2021 முதல் 13.4. 2022 வரை) »
temple
அசுவினி : வேலை வாய்ப்புகள் தேடி வரும். பொதுவாக குருபார்வை முக்கிய இடங்களுக்கு இருப்பதால் விவேகமாக ... மேலும்
 
temple
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: நிறையப் பண வரவு இருக்கும். குருபகவான் ராசிக்கு 9 - ம் வீட்டில் அமர்ந்திருக்கும் ... மேலும்
 
temple
மிருகசீரிடம், 3,4 ம் பாதம்: இனிமையான அனுபவங்களைப் பெறுவீர்கள் பொதுவாக வெளிநாட்டு தொடர்புடைய நன்மைகள் ... மேலும்
 
temple
புனர்பூசம்,4 ம் பாதம்: நிதி நிலைமை அமோகமாக இருக்கும்பொதுவாக பல பாக்கியங்கள் கிடைக்கக் கூடிய ஆண்டாக ... மேலும்
 
temple
மகம்: இயல்பை விடச் சிறப்பாக இருக்கும்.பொதுவாக இந்த  புத்தாண்டு சென்ற ஆண்டைவிட சிறப்பாக இருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.