Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

கும்பம்: லாப ஸ்தானத்தில் சனி பணமழை கொட்டும் கும்பம்: லாப ஸ்தானத்தில் சனி பணமழை ...
முதல் பக்கம் » தமிழ் புத்தாண்டு ராசிபலன்! (14.4.2020 முதல் 13.4. 2021 வரை)
மீனம்: கடன் வாங்கினாலும் கனவெல்லாம் நனவாகும்
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஏப்
2020
14:52

பொன் மனம் படைத்த மீன ராசி அன்பர்களே!
இந்த சார்வரி ஆண்டின் தொடக்கத்தில் குருவால் பொருளாதார வளம் மேம்படும். மேலும் அவரின் 7 மற்றும் 9ம் இடத்து பார்வைகள் மூலம் நற்பலன் உண்டாகும். ஆனால் ஜூலை7க்கு பிறகு அவர் மன வேதனையும், நிலையற்ற தன்மையும் கொடுப்பார். பொருள் நஷ்டத்தை ஏற்படுத்துவார். ஆனால் அவரது 5ம் இடத்துப்பார்வை உங்களுக்கு சாதகமாக உள்ளது. அந்த வகையில் உங்களுக்கு எந்த இடையூறுகள் வந்தாலும் அதை குருவின் பார்வை முறியடித்து வெற்றிக்கு வழிவகுக்கும். சனிபகவானால் சிறு பின்னடைவுகள் ஏற்படலாம். மதிப்பு, மரியாதை எதிர்பார்த்தபடி இருக்காது. டிச.26க்கு பிறகு அவரால் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்களால் முன்னேற்றம் காணலாம். ராகுவால் வீண் அலைச்சல், பிரச்னை உருவாகலாம். ஆக.31க்கு பிறகு அவர் காரிய அனுகூலம், பொருளாதார வளம் ஏற்படும், குடும்பத்தில் மகிழ்ச்சி, தொழில் வளர்ச்சியைத் தருவார். கேதுவால் எதிரி தொல்லை ஏற்படும். சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்புண்டு. ஆனால் ஆக.31க்கு பிறகு முயற்சியில் தோல்வி ஏற்படும்.

 பொருளாதார வளம் சீராக இருக்கும். எடுத்த முயற்சிகள் தங்கு தடையின்றி நிறைவேறும். பணப்புழக்கம் சற்று அதிகரிக்கும். மதிப்பு, மரியாதை கூடும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். புதிய வீடு கட்டும் கனவு நனவாகும். ஆனால் அதற்காக கடன் வாங்க வேண்டியதிருக்கும். ஜூலை 7 முதல் நவ.13 வரை செலவுகள் அதிகரிக்கும். சிக்கனம் தேவை. மதிப்பு, மரியாதை சுமாராக இருக்கும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். ஆக.31க்கு பிறகு தேவைகள் பூர்த்தியாகும். வீட்டில் மகிழ்ச்சிக்கு எந்த குறையும் இருக்காது.  நவ.14க்கு பிறகு உங்கள் மீதான அவப்பெயர் மறையும். செல்வாக்கு அதிகரிக்கும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் கூடி வரும். திருட்டு களவு பயம் நீங்கும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். டிச.26க்கு பிறகு பணப்புழக்கம் அதிகரிக்கும். புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம்.


பெண்களுக்கு குடும்பத்தினரின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும்.  குடும்பத்தில் முக்கிய அங்கமாக திகழ்வர். கணவரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். சகோதரர்கள் ஒத்துழைப்புடன் செயல்படுவர். ஜூலை7க்கு பிறகு விட்டுக் கொடுத்து போவது நல்லது. நவ.14க்கு பிறகு குருவால் வேலைக்கு செல்லும் பெண்கள் உயர்வு பெறுவர். புதிய பதவி தேடி வரும். சுயதொழில் புரியும்  பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். ஆக.31க்கு பிறகு ஆடை, ஆபரணம் சேரும். பிறந்த வீட்டில் இருந்து பொருள் வந்து சேரும். பெண் காவலர்கள் சிறப்பான பலன் பெறுவர். தோழிகள் ஆதரவுடன் செயல்படுவர். ஆரோக்கியம் மேம்படும்.
ஆக.31க்கு பிறகு உஷ்ண, பித்தம், மயக்கம், சளி போன்ற உபாதைகள் மறையும். பயணத்தின் போது கவனம் தேவை.

சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்கள் டிச. 26க்கு பிறகு பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம்  நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும்.
* வியாபாரிகளுக்கு பகைவர்களின் தொல்லைகள் குறையும். நவ.14க்கு பிறகு தங்கம், வெள்ளி,வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர்.
* தரகு, கமிஷன் தொழிலில் டிச.26க்கு பிறகு  வளர்ச்சி காணலாம். பெண்கள் வகையில் இருந்த இடர்பாடுகள்  மறையும். அதன் பின் அதே பெண்கள் தவறை உணர்ந்து உதவிகரமாக செயல்படுவர்.
* அரசு பணியாளர்களுக்கு நவ.14க்கு பிறகு  மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.  வேலையின்றி இருப்பவர்களுக்கு  நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும்.
* தனியார் துறையில் பணிபுரிவோருக்கு திறமைக்கேற்ப அங்கீகாரம் கிடைக்கும். விரும்பிய இடத்துக்கு மாற்றம் பெறலாம்.  சீரான முனனேற்றம் காண்பர். சம்பள உயர்வு வழக்கம் போல் இருக்கும்
* ஐ.டி., துறையினருக்கு செல்வாக்கு பாதிப்பு, வீண் மனக்கவலை முதலியன  நவ.13க்கு பிறகு மறையும். அதன்பிறகு பெண்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்களின் மேன்மை அறிந்து சரணடைவர்.
* மருத்துவர்கள் ஆக.31க்கு பிறகு சிறப்பான பலன் அடைவர்.  மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.  சக பெண் உழியர்களின் உதவி கிடைக்கும்.
* வக்கீல்களுக்கு டிச.26க்கு பிறகு தாங்கள் நடத்தும் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
* ஆசிரியர்கள் சிறப்பான வளர்ச்சி காண்பர்.  வேலையில் திறமை பளிச்சிடும். வேலை விஷயமாக குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேருவர்.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் ஆக.31க்கு பிறகு எதிர்பாராத நற்பலன் கிடைக்கும். உங்கள் அதிகாரம் கொடிகட்டி பறக்கும்.
* அரசியல்வாதிகள் டிச.26க்கு பிறகு மேம்பாடு காண்பர். எதிர்பார்த்த பதவி கிடைக்கும். தொண்டர்களின் மத்தியில் அந்தஸ்து உயரும்.
* பொதுநல சேவகர்கள் நற்பலனை எதிர்நோக்கலாம். மக்கள் மத்தியில் புகழ், கவுரம் மேலோங்கும்.
* கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சக கலைஞர்கள் மிகவும் ஆதரவுடன் செயல்படுவர்.  
* விவசாயிகளுக்கு பாசிபயறு, நெல், எள், உளுந்து, கொள்ளு, துவரை,  சோளம், மஞ்சள், கொண்டைக் கடலை மூலம் வருமானம் அதிகரிக்கும். ஆக.31க்கு பிறகு நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வளம் காண்பர். வழக்கு விவகாரங்களில் முடிவு சாதகமாக அமையும். கைவிட்டு போன பொருள் மீண்டும் கிடைக்கும். பக்கத்து நிலத்தின் வகையில் இருந்த தொல்லைகள் மறையும். பால்பண்ணை மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். ஆக.31க்கு பிறகு ஆடுவளர்ப்பில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.
* பள்ளி, கல்லு,கல்லூரி மாணவர்களுக்கு முன்னேற்றத்திற்கு வழி கிடைக்கும். நல்ல தேர்ச்சி இருக்கும். விரும்பிய பாடத்தை பெறலாம். போட்டிகளில் வெற்றி காணலாம். நவம்பர்14-ந் தேதிக்கு பிறகு குருவால் ஆசிரியர்கள் ஆலோசனை கிடைக்கும் . சிலர்வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு கிடைக்க பெறுவர்.

சுமாரான பலன்கள்
* தொழிலதிபர்கள் புதியவர்களிடம் கவனமுடன் பழகவும். எதிலும் பணத்தை முதலீடு செய்வதை விட அறிவை பயன்படுத்தி பலன் தேட வேண்டும். சிலர் தொழில் விஷயமாக இருப்பிடத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டியது வரலாம்.
* வியாபாரிகளுக்கு செலவு அதிகரிக்கும். புதிய வியாபாரம் தற்போது வேண்டாம். வியாபாரம் விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.
* அரசு பணியாளர்களுக்கு ஜூலை7 முதல் நவ.13 வரை நிலையற்ற தன்மை ஏற்படும். வேலை விஷயமாக சிலர் குடும்பத்தை விட்டு தற்காலிகமாக பிரியும் நிலை உருவாகலாம்.
* தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு ஜுலை7க்கு பிறகு வேலைப்பளு அதிகரிக்கும். வேலையில் பொறுமையும், நிதானமும் தேவை. சிலர் எதிர்பாராத வகையில் இடமாற்றம் காண்பர். முதலில் அது பிடிக்காததாக இருந்தாலும் நாளடைவில் விருப்பமானதாக மாறும்.  
* ஐ.டி., துறையினர் அறிமுகம் இல்லாதவர்களிடம் கவனமாக பழகவும். சிலர் தொழில் விஷயமாக இருப்பிடத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டியதிருக்கும்.
* கலைஞர்களுக்கு ஜூலை 7 முதல்  நவ.13 வரை எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம். உங்களுக்கு வரவேண்டிய விருது, பாராட்டு தட்டி பறிக்கப்படலாம். அதே நேரம் பணவிஷயத்தில் பின்னடைவு இருக்காது.
* பள்ளி, கல்லுாரி மாணவர்கள் ஜூலை 7 முதல்  நவ.13 வரை அக்கறையுடன் படிக்க வேண்டியதிருக்கும் ஆசிரியர்களின் அறிவுரையை ஏற்பது நல்லது.

பரிகாரம்

* செவ்வாயன்று துர்கைக்கு குங்கும அர்ச்சனை
* வெள்ளிக்கிழமையில் அம்மனுக்கு நெய் தீபம்
* புனர்பூசத்தன்று ராமபிரானுக்கு துளசி மாலை.

 
மேலும் தமிழ் புத்தாண்டு ராசிபலன்! (14.4.2020 முதல் 13.4. 2021 வரை) »
temple
பெற்றோர் மீது அன்பு கொண்ட மேஷ ராசி அன்பர்களே! இந்த சார்வரி ஆண்டின் தொடக்கத்தில் குரு, சனி பார்வைகளால் ... மேலும்
 
temple
திட்டமிட்டு செயல்படும் ரிஷப ராசி அன்பர்களே! இந்த சார்வரி ஆண்டின் தொடக்கத்தில் குருவால் மகிழ்ச்சி ... மேலும்
 
temple
மற்றவர் கருத்துக்கு மதிப்பளிக்கும் மிதுன ராசி அன்பர்களே! சார்வரி ஆண்டின் தொடக்கத்தில் குருபகவான் மன ... மேலும்
 
temple
கடமையை கண்ணாக மதிக்கும் கடக ராசி அன்பர்களே! இந்த சார்வரி ஆண்டு சிறப்பானதாக அமையும். காரணம் சனி, கேது ... மேலும்
 
temple
பொன்மனம் படைத்த சிம்ம ராசி அன்பர்களே! இந்த சார்வரி ஆண்டு ராகு சாதமாக இருக்கும் நிலையில் பிறக்கிறது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.