சமயபுரம் மாரியம்மன் பக்தர்கள் வீட்டில் விரதம் முடிக்கலாம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஏப் 2020 11:04
திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நடைபெறவிருந்த சித்திரைத் தேரோட்ட விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 5-ம் தேதி கொடியேற்றமும், ஏப்ரல் 14-ம் தேதி நடைபெறவிருந்த சித்திரைத் தேரோட்டமும் ஊரடங்கு உத்தரவு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதால், பச்சைப்பட்டினி விரதம் இருக்கும் பக்தர்கள் ஏப்ரல் 5ம் தேதி காலை 6 முதல் 8 மணிக்குள் தங்கள் வீட்டிலேயே சமயபுரம் மாரியம்மன் படத்தினை வைத்து நெய்வேந்திரமாக தயிர்சாதம், இளநீர், கஞ்சி, நீர்மோர் , பானகம், ஆகியவற்றை படையலிட்டு மாலையினை கழட்டி, காப்பு அவிழ்த்து விரதத்தை முடித்து கொள்ளலாம் என கோயில் இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.