பதிவு செய்த நாள்
06
ஏப்
2020
11:04
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் உலக நன்மைக்காக நவக்கிரக சாந்தி ஹோமம் நடத்தப்பட்டது.
உலகம் கொரோனா என்ற பினியில் இருந்து விடுபடவும், நன்மை பெறவும் திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று நவகிரக சாந்தி ஹோமம் நடந்தது. காலை 9:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம், நவகிரகங்கள் ஆவாகனம், அக்னி காரியம், நவக்கிரக ரிக் மூல மந்த்ர, பாலா மந்திர ஹோமங்கள், விசேஷ திரவியாகுதி, பூர்ணாகுதி, நவகிரகங்களுக்கு கலசாபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து வீரட்டானேஸ்வரர், சிவானந்தவல்லி உள்ளிட்ட மூல மூர்த்திகளுக்கு மகா தீபாராதனை நடந்தது. இந்து சமய அறநிலைத்துறை மற்றும் பக்தர்கள் ஏற்பாட்டில் நடந்த இந்நிகழ்ச்சியை சிவாச்சாரியர்கள் மட்டுமே முன்னின்று செய்தனர். பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.