மீனாட்சி அம்மன் கோயில் கோபுரங்களில் கிருமி நாசினி தெளிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஏப் 2020 12:04
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கோபுரங்களில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கிருமி நாசினி மருந்து தெளிப்படுகிறது.
கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவால் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளன. மீனாட்சி அம்மன் கோயிலில் கொரோனாவை அழிக்க மூலவருக்கு தினமும் பஞ்சகவி பூஜை மற்றும் இடர்களை போக்கும் திருநீற்றுப்பதிகம் ஓதுவார்களால் பாடப்படுகிறது. ஏப்.,14க்கு பின் கொரோனா பாதிப்பு குறைந்தால் சித்திரை திருவிழா ஏப்.,25ல் கொடியேற்றத்துடன் துவங்கவுள்ளது. தற்போது கோயில் நிர்வாகம், மாநகராட்சி சார்பில் கோயில் வளாகம் மற்றும் நான்கு கோபுரங்களிலும் கொரோனா கிருமி நாசினி மருந்து இரு நாட்களுக்கு ஒருமுறை தெளிக்கப்படுகிறது. திருவிழா நாட்களில் சித்திரை வீதிகளில் சுவாமி புறப்பாடு நடக்கும் என்பதால் பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணி, தேரோட்டத்தை முன்னிட்டு மாசி வீதிகளில் ரோட்டை செப்பனிடும் பணியை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. சித்திரை திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்து வருகின்றனர்.மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மேற்கு கோபுரத்தில் கிருமி நாசினி மருந்து தெளித்த மாநகராட்சி ஊழியர்கள்.