செய்யூர்: சூணாம்பேடு அடுத்துள்ள அகரம் கிராமத்தில் அமைந்துள்ள, ஒருபனை அம்மன் கோவிலில், ஐந்தாம் ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா கோலாகலமாக நடந்தது.சூணாம்பேடு அடுத்துள்ளது அகரம் கிராமம். இங்குள்ள ஏரிக்கரையில் ஒருமனை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஐந்தாம் ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி 100 க்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து வந்து காலை 10 மணிக்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். பகல் 12 மணிக்கு அன்னதானமும், மாலை 3 மணிக்கு சிறப்பு பூஜையும், நள்ளிரவு 12 மணிக்கு வானவேடிக்கைகளும், அஷ்டபந்தன மலர் ஊஞ்சல் சேவையும் நடந்தது.