பதிவு செய்த நாள்
10
ஏப்
2020
09:04
திருச்சூர்: கேரள மாநிலம், திருச்சூர் பூரம் திருவிழா, உலகப் பிரசித்தி பெற்றது. இந்தாண்டு, மே, 3ல் நடைபெறவிருந்த திருவிழா, கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால், ரத்து செய்யப்பட்டுள்ளது.அன்று, சாதாரண பூஜைகள் மட்டும் செய்ய, தேவசம் போர்டு திட்டமிட்டுள்ளது. கடந்த, 1962ல், இந்தியா - சீனா இடையிலான போரின் போது, திருச்சூர் பூரம் திருவிழா ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, 58 ஆண்டுகளுக்கு பின், தற்போது மீண்டும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.