Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனம்: போட்டியில் வெற்றி ரிஷபம்: குடும்ப மகிழ்ச்சி ரிஷபம்: குடும்ப மகிழ்ச்சி
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
மேஷம்: பதவி உயர்வு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மேஷம்: பதவி உயர்வு

பதிவு செய்த நாள்

11 ஏப்
2020
01:04

நட்புக்கு முன்னுரிமை தரும் மேஷ ராசி அன்பர்களே!

சுக்கிரன் மே 3ல் இடம் மாறினாலும் மாதம் முழுவதும் நன்மை தருவார். செவ்வாய் மே 4ல் இருந்து நற்பலன் கொடுப்பார். ராகு உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் அமர்ந்து தொடர்ந்து நன்மை தருவார். புதன் மே4ல் இடம் மாறினாலும் அவரால் நற்பலன் கொடுக்க முடியாது. தற்போது புதன் உங்கள் ராசிக்கு 12ம் வீட்டில் இருப்பது சுமாரான பலனைத் தரும். ஏப்.18க்கு பிறகு அவரால் வீட்டில் பிரச்னை வரலாம். உறவினர் வகையில் கருத்து வேறுபாடு ஏற்படலாம்.  பொருள் இழப்பும் வரலாம். சூரியன் உங்கள் ராசியில் இருப்பதும் சாதகமானது அல்ல. அவரால் அலைச்சலும் சோர்வும் ஏற்படும்.


 சுக்கிரனால் பொருளாதார வளம் இருக்கும். பதவி உயர்வு கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை கூடும்.  மே3 க்கு பிறகு குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன், மனைவி இடையே இருந்த பிரச்னை மறையும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மே 3 முதல் செவ்வாயால் பக்தி உணர்வு மேலிடும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் கூடி வரும். ஆனால் புதனால் அவப்பெயர் வரலாம். பெண்கள் ஆடம்பரச் செலவைத் தவிர்ப்பது நல்லது. எதிலும் பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும். மே3 க்கு பிறகு புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து சீதனப் பொருள் வரலாம். சகோதரிகளால் பணஉதவி கிடைக்கும். திருட்டு பயம் இனி இருக்காது. பணிபுரியும் பெண்கள் சிலர் உயர் பதவியை பெற வாய்ப்பிருக்கிறது. சூரியனால் உடல்நலம் பாதிக்கப்படலாம். பயணத்தின் போது கவனம் தேவை. உஷ்ணம், தோல், தொடர்பான நோய் மே 3க்கு பிறகு குணமாகும்.


சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்கள் ராகுவால் நல்ல பொருளாதார வளம், தொழில் வளர்ச்சியைக் காண்பர்.  
* வியாபாரிகளுக்கு வளர்ச்சியான காலகட்டம். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்கள் மாத முற்பகுதியில் தங்கள் எண்ணத்தை நிறைவேற்றவும். அரசு வகையில் உதவி கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும்.
* தரகு, கமிஷன் தொழிலில் இருந்த பின்னடைவுகள் மறையும்.  ஆபார ஆற்றலுடன் செயல்படுவர்.
* அரசு பணியாளர்கள் முன்னேற்றம் காண்பர். கோரிக்கைகளை மே 3க்குள் கேட்டு பெற்று கொள்ளவும்.
* தனியார் துறை பணியாளர்களுக்கு மே 3க்கு பிறகு சுக்கிரனால் பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவும், அனு சரணையும் உண்டு.
* ஐ.டி., துறையினருக்கு அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். இடமாற்ற பீதி மறையும். சக ஊழியர்கள் உறுதுணையாக இருப்பர்.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் மே3 க்கு பிறகு சிறப்பான முன்னேற்றத்தைக் காண்பர். கோரிக்கைகள் நிறைவேறும்.
* அரசியல்வாதிகளுக்கு பகைவர் தொல்லை, அனுகூலமற்ற போக்கு மே 3க்கு பிறகு மறையும். அதன் பிறகு புதிய பதவி தேடி வரும்.
* பொதுநல சேவகர்கள் சீரான நிலையில் இருப்பர். நற்பெயர்,  பொருளாதர வளம் கிடைக்கப் பெறுவர்.
* கலைஞர்களுக்கு அரசிடம் விருது, பாராட்டு போன்றவை கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
* விவசாயிகள் நெல், சோளம், பழவகைகள் மூலம் நல்ல மகசூல் கிடைக்கப் பெறுவர். மே3க்கு பிறகு புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். வழக்கு, விவகாரங்களில் முடிவு  சாதகமாக அமைய வாய்ப்புண்டு.
* பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு குருவின் பார்வை சிறப்பாக உள்ளதால் கல்வியில் பின்னடைவு ஏற்படாது. பெரும்பாலானோருக்கு தேர்வில் நல்ல முடிவு கிடைக்கும்.

 

சுமாரான பலன்கள்

* வியாபாரிகள் வாடிக்கையாளரை அதிக முயற்சி எடுத்து தக்க வைக்க வேண்டியதிருக்கும். எதிரிகளின் இடையூறு தலைதுாக்கும். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகலாம்.
* தனியார் துறை பணியாளர்கள் ஏப்.18க்கு பிறகு திடீர் இடமாற்றத்தைச் சந்திக்க நேரிடும்.
* மருத்துவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். முக்கிய பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம்.
* வக்கீல்கள் மே3 க்கு பிறகு செல்வாக்கு பாதிப்புக்கு ஆளாவர்.  சிலருக்கு வீண் மனக்கவலை ஏற்படலாம்.
* ஆசிரியர்களுக்கு அலைச்சல், வேலைப்பளு இருக்கும். உங்கள் உழைப்புக்கேற்ப மதிப்பு, செல்வாக்கு இல்லாமல் போகலாம்.  பணியிடத்தில் விட்டுக் கொடுத்து போகவும்.
* விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த பலன் பெற இயலாது.  

* பள்ளி, கல்லுாரி மாணவர்கள் புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் சகமாணவர்களிடம் விழிப்புடன் பழகவும். சிரத்தை எடுத்து படிப்பது அவசியம்.


நல்ல நாள்: ஏப்.15,16,17,18,19,23,24,27,28,29, மே 4,5,6,7,13
கவன நாள்: மே 8,9 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 7,8 நிறம்: வெள்ளை, நீலம்


 பரிகாரம்:
* செவ்வாயன்று துர்க்கைக்கு எலுமிச்சை வழிபாடு
* தினமும் காலையில் நீராடியதும் சூரிய தரிசனம்
* சஷ்டியன்று விரதமிருந்து முருகனுக்கு நெய்தீபம்

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
உத்திரம் 2, 3, 4 ம் பாதம்: நினைத்ததை சாதிப்பதில் வல்லவரான உங்களுக்கு பிறக்கும் புரட்டாசி மாதம் கவனமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar