Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

கும்பம்: எதிர்பாராத வருமானம் கும்பம்: எதிர்பாராத வருமானம் மேஷம்: பதவி உயர்வு மேஷம்: பதவி உயர்வு
முதல் பக்கம் » வைகாசி ராசிபலன் (14.5.2020 முதல் 14.6.2020 வரை)
மீனம்: போட்டியில் வெற்றி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மார்
2020
13:45

மனதாலும் தீங்கு நினைக்காத மீன ராசி அன்பர்களே!

சுக்கிரன் மார்ச் 28ல் இடம் மாறினாலும் மாதம் முழுவதும் நன்மை தருவார். செவ்வாய் மார்ச் 23ல் இருந்து சாதக இடமான மகரத்திற்கு வருகிறார். மார்ச் 23க்கு பிறகு செவ்வாயால் முயற்சி அனைத்திலும் வெற்றி காணலாம். பொருளாதார வளம் மேம்படும். குரு மார்ச் 27ல் அதிசாரம் அடைந்து மகர ராசிக்கு வருகிறார். இது சிறப்பான இடம். அவரால் பொருளாதார வளம் மேம்படும்.  

பண வரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். மேலும் அவரது 7, 9 ம் இடத்துப் பார்வைகளும் சிறப்பாக அமைந்து உள்ளன அதன் மூலம் தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. மனமகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகம் பிறக்கும். குடும்பத்தில் இருந்த பின்னடைவுகள் மறையும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக செயல்படுவர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்களின் மேன்மை அறிந்து சரணடையும் நிலை வரலாம்.

குடும்பத்தில் தேவையான வசதி வாய்ப்புகள் கிடைக்கும். மார்ச் 23க்கு பிறகு இடர்பாடுகள் மறையும். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். புதிய வீடு,மனை, வாகனம் வாங்க யோகம் கூடி வரும். மார்ச் 28க்கு பிறகு பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். ஏப்.1க்கு பிறகு சிற்சில பிரச்னை குறுக்கிடலாம். உறவினர் வகையில் கருத்துவேறுபாடு ஏற்படலாம். பொருள் இழப்பும் ஏற்படலாம்.
பெண்கள் வாழ்வில் முன்னேற்றம் காண்பர். மார்ச் 23க்கு பிறகு அக்கம்பக்கத்தினர் அனுசரணையாக நடப்பர். கணவரிடத்தில் அன்பு மேலோங்கும். வேலைக்குச் செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். புதிய பதவியும் தேடி வரும். பணியிடத்தில் நிம்மதியும் திருப்தியும் கிடைக்கும். சுய தொழில் புரியும் பெண்களுக்கு லாபம் அதிகரிக்கும். ஏப்.1க்கு பிறகு குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும் உடல்நலனில் அக்கறை காட்டவேண்டியதிருக்கும். சூரியனால் அலைச்சலும் சோர்வும் ஏற்படும். உஷ்ணம், தோல், தொடர்பான நோய்கள் மார்ச் 23க்கு பிறகு பூரண குணம் அடையும்.  பயணத்தின் போது கவனம் தேவை.

சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு மாத முற்பகுதியில் அரசின் சலுகை கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும்.
* வியாபாரிகள் மார்ச் 28க்கு பிறகு அதிக லாபத்தை பெறுவர். தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் வளர்ச்சி காண்பர்.
* தரகு,கமிஷன் தொழிலில் திடீர் வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு. பகைவர்களை எதிர்த்து வெற்றி கொள்ளும் ஆற்றல் உண்டாகும்.
* தனியார் துறை பணியாளர்களுக்கு எதிர்பார்த்த கடனுதவி எளிதில் கிடைக்கும். மார்ச் 28க்கு பிறகு மேலதிகாரிகளின் ஆதரவு இருக்கும். சக பெண் ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குரு பலமாக இருப்பதால் எந்த பிரச்னையையும் முறியடித்து வெற்றி காண்பீர்கள்.
* ஆசிரியர்களுக்கு மார்ச் 27க்கு பிறகு எதிர்பாராத முன்னேற்ற சம்பவம் நடக்கும். பணியிடத்தில் அதிகாரம் கொடி கட்டி பறக்கும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்.
* அரசு வேலையில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பர். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை மார்ச் 28க்குள் கேட்டு பெறவும்.  
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் மார்ச் 23க்கு பிறகு உயர்ந்த நிலையை அடைவர். சக பெண் ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர்.  மேலதிகாரிகளின் கருணை பார்வை கிடைக்கும். கோரிக்கைகள் நிறைவேறும்..
* அரசியல்வாதிகள் மார்ச் 23க்கு பிறகு சிறப்பான பலனைக் காணலாம்.  எதிர்பார்த்த புதிய பதவி கிடைக்க வாய்ப்புள்ளது.
* பொதுநல சேவகர்கள் நற்பலனை எதிர்பார்க்கலாம். பதவியோடு, பண வரவையும் காணலாம்.
* கலைஞர்கள் முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசு வகையில் விருது கிடைக்கும். .
* விவசாயிகளுக்கு உழைப்புக்கேற்ற வருமானம் கிடைக்கும். மார்ச் 23க்கு பிறகு புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். பக்கத்து நிலத்தின் வகையில் இருந்த தொல்லைகள் மறையும். வழக்கு, விவகாரங்கள் சாதகமாக அமைய வாய்ப்புண்டு.
* பள்ளி,கல்லுாரி மாணவர்களுக்கு மார்ச் 27க்கு பிறகு வளர்ச்சி ஏற்படும். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காணலாம். ஆசிரியர்களின் வழிகாட்டுதல் பயனுள்ளதாக அமையும்.   

சுமாரான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். ஆனால் உழைப்புக்குரிய பலன் கிடைக்கும்.
* ஐ.டி., துறையினர் ஏப்.1க்கு பிறகு இடமாற்றத்தை சந்திக்க வேண்டியதிருக்கும். வேலையில் அதிக அக்கறையுடன் இருக்கவும்.
* மருத்துவர்கள் மேலதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை. உங்கள் பொறுப்புகளை தட்டிகழிக்காமல் செய்யவும்.  
* வக்கீல்களுக்கு பிடிப்பு இல்லாத நிலை இருக்கலாம். பளுவும், அலைச்சலும் இருக்கும். சிலர் திடீர் இடமாற்றத்தை சந்திக்கலாம்.
* விவசாயிகளுக்கு கால்நடை வகையில் எதிர்பார்த்த பலன் கிடைக்காது.

நல்ல நாள்: மார்ச் 17,18,19,20,24,25,29,30 ஏப். 5,6,7,8,13
கவன நாள்: மார்ச் 15,16, ஏப்.9,10 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 7,8 நிறம்: வெள்ளை,சிவப்பு.

பரிகாரம்:
* தினமும் காலையில் சூரிய நமஸ்காரம்
* சனிக்கிழமை பெருமாளுக்கு துளசிமாலை
* திங்கட்கிழமையில் சிவனுக்கு அரச்சனை

 
மேலும் வைகாசி ராசிபலன் (14.5.2020 முதல் 14.6.2020 வரை) »
temple
பொறுப்புடன் கடமையாற்றும் மேஷ ராசி அன்பர்களே! இந்த மாதம் சுக்கிரன் ஜுன் 4ல் வக்கிரம் அடைந்து ... மேலும்
 
temple
இந்த மாதம் குருவால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுபநிகழ்ச்சி நடந்தேறும். செல்வாக்கு ... மேலும்
 
temple
இந்த மாதம் உங்கள் ராசியில் இருக்கும் சுக்கிரன் ஜுன் 4 வரை நன்மை கொடுப்பார். அதன் பிறகு வக்கிரம் அடைந்து ... மேலும்
 
temple
இந்த மாதம் சூரியன், குரு, சனி, கேது ஆகியோரால் நற்பலன் தொடர்ந்து கிடைக்கும். மேலும் புதன் மே24 வரை நன்மை ... மேலும்
 
temple
இந்த மாதம் 11ம் இடத்தில் இருக்கும் ராகு, 10ம் இடத்தில் இணைந்திருக்கும் புதன், சூரியன் முன்னேற்றத்தை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.