பதிவு செய்த நாள்
11
ஏப்
2020
01:04
மதிநுட்பத்துடன் செயலாற்றும் மிதுன ராசி அன்பர்களே!
ராசிக்கு 11ல் சூரியன் மாதம் முழுவதும் நற்பலன் கொடுப்பார். புதன் ஏப்.18ல் இடம் மாறினாலும் சாதகமான பலனைத் தருவார். அவரால் பொன், பொருள் சேரும். சுக்கிரன் மே 3க்கு பிறகு உங்கள் ராசிக்கு வருவதால் பெண்களால் நன்மை கிடைக்கும். விருந்து விழா என சென்று வருவீர்கள். பொருளாதார வளம் பெருகும். சூரியனால் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். அரசு வகையில் உதவி கிடைக்கும்.
குடும்பத்தில் தேவையனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் குதுாகலம் உண்டாகும். கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும். சமூகத்தில் செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சகோதர வழியில் நன்மை கிடைக்கும். ராகுவால் உறவினர்கள் வகையில் மனக்கசப்பு வர வாய்ப்புண்டு. நெருப்பு, மின்சாரம் தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது.
பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். கணவர், குடும்பத்தாரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்க வாய்ப்புண்டு. அக்கம்பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். சுய தொழில் புரியும் பெண்களுக்கு வங்கிக் கடன் எளிதாக கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். பெற்றோர் வீட்டில் இருந்து சீதனப்பொருள் வரப் பெறலாம். சூரியனால் உடல் உபாதைகள் குணமாகும். செவ்வாயால் ஏற்பட்ட பொருள் விரயம், பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள் முதலியன மே 3க்கு பிறகு மறையும். ஆனால் பயணத்தின் போது கவனம் தேவை.
சிறப்பான பலன்கள்* தொழிலதிபர்களுக்கு புதிய தொழில் அனுகூலத்தை கொடுக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். சுயதொழில் முயற்சி முன்னேற்ற பாதையில் செல்லும்.
* வியாபாரிகள் நல்ல வளர்ச்சியை காண்பர். லாபம் படிப்படியாக உயரும். அரசின் சலுகை கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும்.
* அரசு பணியாளர்கள் விண்ணப்பித்த கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இடமாற்ற பீதி மறையும்.
* தனியார்துறை பணியாளர்கள் முன்னேற்றம் காண்பர். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. மேலதிகாரிகளின் கருணை பார்வை கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும்.
* ஐ.டி., துறையினருக்கு பணியிடத்தில் அதிகாரம் கொடிகட்டி பறக்கும். தங்கள் கோரிக்கைகளை மே 3க்குள் கேட்டு பெறலாம்.
* வக்கீல்கள் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்.
* கலைஞர்களுக்கு மே 3க்கு பிறகு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். வருமானம் பெருகும். நடன கலைஞர்கள் சிறப்பான வளர்ச்சி காண்பர். புகழ் கிடைக்கும்.
* விவசாயிகள் போதிய மகசூலை பெறுவர். ஆனால் அதிக உழைப்பை சிந்த வேண்டியது இருக்கும்.
கால்நடை வளர்ப்பின் மூலம் அதிக வருமானம் கிடைக்கும்.
* பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பிற்போக்கான நிலையில் இருந்து விடுபடுவர். கல்வியில் முன்னேற்றம் காண்பர். தேர்வு முடிவு மகிழ்ச்சி தரும். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். சிலர் வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பை பெறுவர்.
சுமாரான பலன்கள்* தொழிலதிபர்களுக்கு சனிபகவானால் அலைச்சல் அதிகரிக்கும் வெளியூரில் தங்க நேரிடலாம். சிலர் தரம்தாழ்ந்த பெண்ணின் சேர்க்கையால் பண இழப்பை சந்திக்க நேரலாம். எனவே யாரிடமும் பார்த்து எச்சரிக்கையுடன் பழகவும்.
* தரகு,கமிஷன் தொழிலில் பலனை எதிர்பாராமல் பாடுபட நேரிடும். எதிரி தொல்லைகள் அதிகரிக்கும். மறைமுகப்போட்டி அதிகம் இருக்கும்.
* தனியார் துறை பணியாளர்கள் மே 3க்கு பிறகு வேலைப்பளுவைச் சந்திப்பர். முக்கிய பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் செய்யவும். மேல்திகாரிகளிடம் அனுசரித்து போகவும்.
* மருத்துவர்கள் மே 3க்கு பிறகு புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
* வக்கீல்கள் மே 3க்கு பிறகு வீண்விவாதங்களை தவிர்க்கவும். பணவிஷயத்தில் கவனம் தேவை.
* ஆசிரியர்கள் அதிக வேலைப்பளுவால் உடல்நலக்குறைவுக்கு ஆளாக வாய்ப்புண்டு.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் வேலையில் கூடுதல் கவனம் செலுத்தவும்.
* அரசியல்வாதிகள் சுமாரான நிலையில் இருப்பர். எதிர்பார்த்த பதவி கிடைப்பது அரிது.
* பொதுநல சேவகர்கள் முயற்சியில் தடை, பொருள் நஷ்டத்திற்கு ஆளாவர்.
* விவசாயிகள் புதிய சொத்து வாங்க சில காலம் பொறுத்திருக்க வேண்டும். வழக்கு, விவகாரங்களில் முடிவு சுமாராக இருக்கும். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம்
நல்ல நாள் ஏப்.14,20,21,22,23,24,27,28,29 மே 1,2,3,8,9,10,11,12,
கவன நாள் ஏப்.15,16,17 மே13 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, பச்சை எண்: 3,7
பரிகாரம்:
* வெள்ளியன்று ராகு காலத்தில் துர்கை வழிபாடு
* சனிக்கிழமையில் சனீஸ்வரருக்கு எள் விளக்கு
* ஏகாதசியன்று பெருமாளுக்கு துளசி அர்ச்சனை