பதிவு செய்த நாள்
11
ஏப்
2020
02:04
கடமையில் கண்ணாகத் திகழும் கடக ராசி அன்பர்களே!
உங்களுக்கு இந்த மாதம் வளர்ச்சி முகமாக அமையும். சூரியன் சாதகமான இடத்துக்கு வந்துள்ளார். ஏப்.18க்கு பிறகு புதனும், மே 3 வரை சுக்கிரனும் நன்மை தருவர். உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் இணைந்து இருக்கும் கேது, சனிபகவான் மாதம் முழுவதும் நற்பலன் தருவர். குரு 7ம் இடத்தில் இருப்பது சிறப்பானது. செயலில் வெற்றி உண்டாகும். அவர் குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரித்து சுபநிகழ்ச்சியைத் தருவார். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவை பூர்த்தியாகும். இருப்பினும் ஏப்.18 வரை புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் மனதில் வேதனை வரலாம். பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும்.
குடும்பத்தில் வசதி வாய்ப்பு பெருகும். பணவரவு அதிகரிக்கும். கேதுவால் பொருளாதார வளம் சிறக்கும். அபார ஆற்றல் பிறக்கும். ஆடை, ஆபரணம் சேரும். புதிய வீடு, வாகனம் வாங்கலாம். சகோதரிகள் ஆதரவுடன் செயல்படுவர். பெண்கள் குடும்பத்தாரிடம் நன்மதிப்பை பெறுவர். ஏப்.18க்கு பிறகு சகோதரரால் பணஉதவி கிடைக்கும். கணவரின் அரவணைப்பு கிடைக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அக்கம் பக்கத்தினர் ஆதரவுடன் இருப்பர். உறவினர்கள் வருகையால் நன்மை கிடைக்கும். பிறந்த வீட்டில் இருந்து பொருள் கிடைக்க பெறலாம். வேலைக்கு செல்லும் பெண்கள் பதவி உயர்வு பெறுவர். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். செவ்வாயால் மே 3க்கு பிறகு பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள் வரலாம்.
சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்கள் ஏப்.18க்கு பிறகு தொழிலில் லாபம் அதிகரிக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் பெறும். பங்கு வர்த்தகம் மூலம் அதிக லாபம் கிடைக்கும். கூட்டுத்தொழில் நல்ல வளர்ச்சி அடையும்.
* வியாபாரிகள் வளர்ச்சி காண்பர். புதிய தொழில் அனுகூலத்தை கொடுக்கும். தரம் தாழ்ந்த பெண்ணின் சேர்க்கையால் அவப்பெயரையும் பணத்தை விரயமாக்கியவர்கள் அவர்கள் பிடியில் இருந்து ஏப்.18க்கு பிறகு விடுபடுவர்.
* தரகு, கமிஷன் தொழிலில் சீரான வளர்ச்சி உண்டாகும். பகைவர் சதியை முறியடிக்கும் வல்லமை உண்டாகும்.
* தனியார் பணியாளர்களுக்கு ஏப்.18க்கு பிறகு வேலைப்பளு குறையும். சக பெண் ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர்.
* ஐ.டி.,துறையினருக்கு பணிச்சுமை குறையும். தங்களின் கோரிக்கைகளை மே 3க்குள் கேட்டு பெறவும்.
* மருத்துவர்கள் உழைப்புக்கு தக்க பலன் கிடைக்கப் பெறுவர். சம்பள உயர்வுக்கு தடையிருக்காது.
* வக்கீல்கள் ஏப்.18 வரை தடை குறுக்கிட்டாலும் முன்னேற்றம் கிடைக்கப் பெறுவர். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
* ஆசிரியர்கள் குருபகவான் அருளால் பிரச்னைகளை முறியடித்து வெற்றிக்கு வழிகாண்பர். கோரிக்கைகள் நிறைவேறும்.
* அரசு பணியாளர்கள் நன்மை கிடைக்கப் பெறுவர். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர்.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் முன்னேற்றம் காண்பர். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
* அரசியல்வாதிகளுக்கு நல்ல பணப்புழக்கம் இருக்கும். எதிர் பார்த்த பதவி கிடைக்கும்
* பொதுநல சேவகர்கள் நற்பெயர் பெறுவர். சிலருக்கு புதிய பதவி கிடைக்கும்.
* கலைஞர்கள் முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
* விவசாயிகள் பாசிப்பயறு, நெல், கோதுமை, எள், உளுந்து, கொள்ளு, துவரை, கொண்டைக்கடலை, சோளம், மஞ்சள், தக்காளி, பழ வகைகள் மூலம் கூடுதல் வருமானம் காண்பர். .
* பள்ளி, கல்லுாரி மாணவர்கள் ஏப்.18க்கு பிறகு முன்னேற்றத்தைக் காணலாம். தேர்வில் அதிக மதிப்பெண் கிடைக்கும்.
மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும்.
சுமாரான பலன்கள்
* தொழிலதிபர்கள் சக தொழிலதிபர்களின் எதிர்ப்பை சந்திக்க நேரிடலாம்.
* தனியார் துறையில் பணிபுரிபவர்கள் ஏப்.18 வரை பணிச்சுமையால் உடல்நலக்குறைவுக்கு ஆளாவர். வேலையில் பொறுமை தேவை.
* கலைஞர்களுக்கு மே 3க்குபிறகு பரிசு, பாராட்டு கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
* விவசாயிகளுக்கு வழக்கு, விவகாரங்களில் சுமாரான முடிவு கிடைக்கும்
நல்ல நாள்: ஏப்.14,15,16,23,24,25,26,30,31 மே 4,5,10,11,12,13
கவன நாள்: ஏப். 18,19 சந்திராஷ்டமம்
நிறம்: வெள்ளை, பச்சை எண்: 2,3,5
பரிகாரம்:
* தேய்பிறை அஷ்டமியன்று பைவர் வழிபாடு
* வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபம்
* கார்த்திகையன்று முருகனுக்கு பாலாபிேஷகம்