பதிவு செய்த நாள்
11
ஏப்
2020
03:04
துணிந்து முடிவு எடுக்கும் துலாம் ராசி அன்பர்களே!
ராசிக்கு 3ம் இடத்தில் இருக்கும் சனி,கேது நற்பலன் தருவர். சுக்கிரன் மே3ல் 9ம் இடத்திற்கு மாறினாலும் மாதம் முழுவதும் நன்மை தருவார். புதன் ஏப்.18 வரையும், மே 4க்கு பிறகும் சாதகமான இடத்தில் இருக்கிறார். கேதுவால் பக்தி உயர்வு மேம்படும். சனிபலத்தால் பொருளாதார வளம் சிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எடுத்த காரியம் வெற்றி பெறும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்கலாம் சூரியன் சாதகமற்று இருப்பதால் அவ்வப்போது பிரச்னை தலைதூக்கும்.
கடவுளின் கருணை உங்களுக்கு கிடைக்கும். சுக்கிரனால் சுபயோகம் உண்டாகும். ஆடம்பர வசதிகள் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பெண்கள் ஆதரவுடன் இருப்பர். பொருளாதார வளம் கூடும். புதனால் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். ஏப்.18 முதல் மே 4 வரை குடும்பத்தில் குழப்பம் நிலவும். மனைவி வகையில் பிரிவு ஏற்படலாம். மே 4க்கு பிறகு புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். கணவன், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை இருக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும்.
பெண்கள் மகிழ்ச்சிகரமாக இருப்பர். சகோதரிகள் வகையில் நன்மை உண்டாகும். தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் கைகூடும். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு செல்வீர்கள். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். ஏப்.18 முதல் மே 4 வரை சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியதிருக்கும். செவ்வாயால் ஏற்பட்ட உபாதைகள் மே 6க்கு பிறகு பூரண குணம் அடையும்.
சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு லாபம் அதிகரிக்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும்
* வியாபாரிகள் வியாபாரரீதியாக அடிக்கடி பயணம் மேற்கொள்வர். ஆதாயத்துடன் திரும்புவர்.
* தனியார் துறையில் பணிபுரிபவர்கள் சிறப்பான முன்னேற்றத்தைக் காணலாம். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை ஏப்.18க்குள் கேட்டு பெறவும். மே4 க்கு பிறகு வேலைப்பளு குறையும். கோரிக்கைகள் நிறைவேறும்.
* ஐ.டி., துறையினருக்கு சகஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர். மே 4 க்கு பிறகு பதவி உயர்வு தேடி வரும்.
* வக்கீல்கள் எதிர்பாராத வகையில் வருமானம் கிடைக்கப் பெறுவர். மே 4க்கு பிறகு வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
* போலீஸ், ராணுவத்தினர் நல்ல வளர்ச்சி காண்பர். பதவி உயர்வு கிடைக்கப் பெறுவர்.
* அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவால் வளர்ச்சி காண்பர்.
* கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். சக கலைஞர்கள் உதவிகரமாக இருப்பர்.
* விவசாயிகளுக்கு மானாவாரி பயிர்கள் மூலம் மகசூல் அதிகரிக்கும். புதிய சொத்து வாங்கலாம்.
* மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவர். போட்டிகளில் வெற்றி காணலாம்.
சுமாரான பலன்கள்
* அரசு பணியாளர்கள் அதிக உழைப்பை சிந்த வேண்டியதிருக்கும். அலைச்சலும் பளுவும் அதிகரிக்கும்.
* தனியார் துறை பணியாளர்களுக்கு ஏப்.18 முதல் மே 4 வரை வேலையில் பொறுமை தேவை. அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.
* மருத்துவர்கள் கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். சிரத்தை எடுத்தே கோரிக்கை பெற வேண்டியதிருக்கும்.
* ஆசிரியர்கள் திடீர் இடமாற்றத்திற்கு ஆளாக நேரிடலாம்.
நல்ல நாள்: ஏப்.14,20,21,22,23,24,30,31,மே1,2,3,6,7,10,11,12
கவன நாள்: ஏப். 25,26 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, கருப்பு எண்: 5,7
பரிகாரம்:
* தினமும் நீராடியதும் சூரிய நமஸ்காரம்
* புதன்கிழமையில் குலதெய்வ வழிபாடு
* பிரதோஷத்தன்று நந்தீஸ்வரர் தரிசனம்