பதிவு செய்த நாள்
11
ஏப்
2020
03:04
விதியை மதியால் வெல்லும் விருச்சிக ராசி அன்பர்களே!
சூரியன் சாதகமான இடத்தில் இருப்பதால் எதிர்பார்ப்பு நிறைவேறும். புதன் ஏப்.18 முதல் மே 4 வரை நற்பலன் கொடுப்பார். 3ம் இடத்தில் உள்ள செவ்வாய் மே3 வரை நன்மை தருவார். சுக்கிரன் மே3ல் 8ம் இடமான மிதுனத்திற்கு மாறி நன்மை கொடுப்பார். சூரியனின் பலத்தால் மனதில் துணிச்சல் பிறக்கும். பகைவர்களை வெற்றி கொள்வீர்கள். பொருளாதார வளம் சிறக்கும். பண வரவு கூடும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கலாம். சமூக மதிப்பு உயரும். மே3க்கு பிறகு வசதிகள் பெருகும்.
பெண்கள் ஆதரவுடன் செயல்படுவர்.தெய்வ அனுகூலம் கிடைக்கும். லாபம் அதிகரிக்கும். மனதில் பக்தி மேலோங்கும். ஏப்.18 வரை புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் சில பிரச்னைகள் உருவாகலாம். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு வர வாய்ப்புண்டு. ஏப்.18 க்குப் பிறகு முயற்சி வெற்றி பெறும். ஏப்.18க்கு பிறகு தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் கைகூடும். மே3க்கு பிறகு சகோதரர்கள் உதவிகரமாக இருப்பர். அவர்களால் பண உதவி கிடைக்கும். சனி, கேதுவால் சிலருக்கு ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். தாயை பிரியும் நிலை ஏற்படலாம். பெண்கள் குடும்பத்தோடு புனித தலங்களுக்கு செல்வர். அண்டை வீட்டாரின் சதி எடுபடாது. அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும். வியாபாரம் செய்யும் பெண்கள் அதிக வருமானம் காண்பர். கணவரின் அன்பும், அரவணைப்பும் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். புதிய பதவி தேடி வரும். ஆரோக்கியம் மேம்படும். மே 3க்கு பிறகு பயணத்தின் போது கவனம் தேவை.
சிறப்பான பலன்கள்* தொழிலதிபர்கள் மே3க்கு பிறகு முன்னேற்றம் காண்பர். பங்கு வர்த்தகம் அதிக லாபத்தை தரும்
* வியாபாரிகளுக்கு லாபத்துக்கு குறைவிருக்காது. பெண்களால் ஏற்பட்ட பிரச்னை மே 3க்கு பிறகு மறையும்.
* தனியார் துறை பணியாளர்கள் சூரியனால் பதவி உயர்வு காண்பர். பதவி உயர்வு கிடைக்கும். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும் வேலை நிமித்தமாக குடும்பத்தை பிரிந்தவர்கள் ஒன்று சேர வாய்ப்புண்டு.
* ஐ.டி., துறையினருக்கு மே3 க்கு பிறகு சகஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர்.
* வக்கீல்கள் மே3 க்கு பிறகு வழக்கு, விவகாரங்கள் சாதகமாக அமையும்.
* போலீஸ், ராணுவத்தினருக்கு செவ்வாய் சிறப்பாக இருப்பதால் திறமைக்கு ஏற்ப நற்பெயர் கிடைக்கும். கோரிக்கைகள் நிறைவேறும்.
* கலைஞர்கள் மே3 க்கு பிறகு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். சக கலைஞர்கள் ஆதரவுடன் இருப்பர்.
* விவசாயிகள் நல்ல மகசூலைப் பெறுவர். குறிப்பாக பாசி பயறு நெல், கோதுமை, துவரை, பழ வகைகள் நல்ல வருவாயை கொடுக்கும்.
* மாணவர்கள் ஏப்.18க்கு பிறகு முன்னேற்ற பாதையில் செல்வர். போட்டிகளில் வெற்றி காண்பர்.
சுமாரான பலன்கள்* தொழிலதிபர்கள் புதிய முயற்சியில் ஈடுபட வேண்டாம். முதலீட்டை அதிகப்படுத்த வேண்டாம். அரசிடம் எதிர்பார்த்த சலுகை கிடைப்பது அரிது.
* ஐ.டி., துறையினர் மே 3க்கு பிறகு அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். முக்கிய பொறுப்புகளை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம்.
* மின்சாரம், நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது.
* மருத்துவர்கள் பணிச்சுமைக்கு ஆளாக நேரிடும். மேலதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.
* ஆசிரியர்களுக்கு முயற்சியில் தடை ஏற்படும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காது. .
* அரசு பணியாளர்களுக்கு திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காமல் போகலாம்.
* அரசியல்வாதிகள் மே3 க்கு பிறகு பண இழப்பை சந்திக்க நேரிடலாம் கவனம்.
நல்ல நாள்: ஏப்.15,16,17,23,24,25,26 மே1,2,3,4,5,8,9,13
கவன நாள்: ஏப்.27,28,29 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெள்ளை எண்: 5,7.
பரிகாரம்:
* சனியன்று சனீஸ்வரருக்கு அர்ச்சனை
* வெள்ளியன்று துர்கைக்கு நெய் தீபம்
* தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாடு