பதிவு செய்த நாள்
11
ஏப்
2020
02:04
கடமையில் கண்ணாகத் திகழும் கன்னி ராசி அன்பர்களே!
ராசிக்கு 5ம் இடத்தில் இருக்கும் குருவால் நற்பலன் தொடர்ந்து கிடைக்கும். புதன் ஏப்.18 முதல் மே 4 வரை நற்பலனைக் கொடுப்பார். 9ம் இடத்தில் உள்ள சுக்கிரன் மே 3 வரை நன்மை தருவார் செவ்வாய் மே 3ல் 6-ம் இடமான கும்பத்திற்கு மாறி நன்மை தருவார். சனி பகவானின் 3ம் இடத்துப் பார்வை சிறப்பாக உள்ளது. முயற்சியில் வெற்றி தருவார். பகைவர் சதியை முறியடிக்கும் வல்லமை கிடைக்கும். உங்கள் ஆற்றல் மேம்படும். சுக்கிரனால் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். பெண்களால் நன்மை கிடைக்கும். பொருளாதார வளம் கூடும். சகோதரிகள் ஆதரவுடன் இருப்பர்.
புதனால் ஏப்.18க்கு பிறகு கணவன், மனைவி கருத்துவேறுபாட்டுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். அதன்பின் தம்பதியிடையே அன்பு பெருகும். முயற்சியில் வெற்றி கிடைக்கும். ஆடை, ஆபரணம் சேரும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும்.செவ்வாயால் மே 3க்கு பிறகு அக்கம்பக்கத்தினர் தொல்லை மறையும். புதிய வீடு,மனை,வாகனம் வாங்க யோகம் உண்டு. பெண்களுக்கு குடும்பத்தில் குதுாகலம் ஏற்படும். குரு சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். சகோதரிகளால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஏப்.18க்கு பிறகு முன்னேற்றம் காணலாம். விருந்து, விழா என சென்று வருவீர்கள். சகோதரர்களால் பண உதவி கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடைவர். கடந்த மாதம் இருந்த அலைச்சல், அவப்பெயர், வயிறுநோய்கள் முதலியன மறையும். செவ்வாயால் மே 3க்கு பிறகு பிள்ளைகள் உடல்நிலை சீர்படும்.
சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு ஏப்.18க்கு பிறகு தடைகள் மறையும். லாபம் அதிகரிக்கும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும்.
* வியாபாரிகள் கூடுதல் ஆதாயம் காண்பர். ஏப்.18 முதல் மே 4 வரை எதிர்பாராத வகையில் பணவரவு காணலாம்.
* தனியார் துறையினருக்கு ஏப்.18க்கு பிறகு வேலைப்பளு குறையும். புதனால் நல்ல முன்னேற்றம் காணலாம்.
* ஐ.டி. துறையினர் பதவி உயர்வு காண்பர். கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேறும்.
* மருத்துவர்களுக்கு மே 3க்கு பிறகு பணியிடத்தில் அதிகாரம் கொடிகட்டிப் பறக்கும்.
* வக்கீல்கள் ஏப்.18 முதல் மே 4 வரை தாங்கள் நடத்தும் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு பெறுவர்.
* ஆசிரியர்களுக்கு குரு சிறப்பாக உள்ளதால் பிரச்னையை முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம்.
* போலீஸ், ராணுவத்தினர் மே 3க்கு பிறகு முன்னேற்றத்தை காணலாம். வேலைபளு குறையும்.
* அரசியல்வாதிகள் மே 3க்கு பிறகு சிறப்பான பலனை காண்பர். புதிய பதவி கிடைக்கும்.
* கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பாராட்டு, புகழ் கிடைக்கும்.
* விவசாயிகளுக்கு சொத்து வாங்கும் எண்ணம் மே3க்குள் நிறைவேறும். நிலப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.
* மாணவர்கள் பிற்போக்கான நிலையில் இருந்து விடுபடுவர். ஏப்.18க்கு பிறகு போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.
சுமாரான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்ப வில்லை. வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.
* வியாபாரிகள் சிலர் மே 4க்கு பிறகு தீயோர் சேர்க்கைக்கு ஆளாகலாம். எனவே எச்சரிக்கையுடன் பழகவும்.
* அரசு பணியாளர்கள் அதிக சிரத்தை எடுத்தால் தான் கோரிக்கைள் நிறைவேறும்.
* ஐ.டி., துறையினர் ஏப்.18வரை அதிக பளுவை சுமக்க வேண்டியதிருக்கும்.
* மருத்துவர்கள் ஏப்.18 வரை வேலையில் கவனமாக இருக்கவும்.
* கலைஞர்களுக்கு மே3க்கு பிறகு எதிரி தொல்லை அதிகரிக்கும். மறைமுகப்போட்டி உருவாகும்.
* மாணவர்கள் சிலருக்கு மே 4க்கு பிறகு நண்பர்களால் பணம் விரயமாகலாம் கவனம்.
நல்ல நாள்: ஏப்.18,19,20,21,22,27,28,29,30,31, மே 4,5,8,9
கவன நாள்: ஏப்ரல் 23,24 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை எண்: 2,4.
பரிகாரம்:
* தினமும் காலையில் நீராடியதும் சூரியவழிபாடு
* ராகுவுக்கு நீல நிறவஸ்திரம் சாத்தி அர்ச்சனை
* வெள்ளிக்கிழமை அம்மனுக்கு பாலபிேஷகம்