பதிவு செய்த நாள்
15
ஏப்
2020
12:04
திருப்பூர்: தமிழ்ப்புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, கோவில்களில், பக்தர்கள் இன்றி சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
பெரும்பாலான பக்தர்கள், வீட்டிலேயே கனி, பழம் வைத்து சுவாமி கும்பிட்டனர். தமிழ்ப்புத்தாண்டான சித்திரை முதல் நாள், சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். அவிநாசி, கொடுமுடி போன்ற தலங்களுக்கு சென்று, தீர்த்தம் எடுத்துவந்து, விநாயகர் கோவில்களில் சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடக்கும்.கொரோனா ஊரடங்கால், வழிபாடு எளிமையாக முடிந்தது. விநாயகர் கோவில்கள், முக்கியமான கோவில்களில், அதிகாலையிலேயே, பூஜைகள் நடத்தி முடிக்கப்பட்டன. கிராமப்புற கோவில்களில் சிறப்பு வழிபாடு எதுவும் நடக்கவில்லை.இதேபோல, திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் மலையாளிகள், விஷூ பண்டிகையை தங்கள் வீடுகளில் எளிமையாக கொண்டாடினர்.