பதிவு செய்த நாள்
15
ஏப்
2020
01:04
தென்காசி : அச்சன்கோவில் அய்யப்பன் கோவிலில் நேற்று, சித்திரை விஷு சிறப்பு பூஜை நடந்தது.
தமிழக எல்லையான, தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே, கேரளா, அச்சன்கோவிலில் அய்யப்பன் கோவில் அமைந்துள்ளது. இங்கு, சித்திரை முதல் தேதியன்று, விஷு திருவிழா சிறப்பாக நடக்கும்.தற்போது, கொரோனா பாதிப்பால், அர்ச்சகர்கள் வழக்கமான பூஜைகளை மட்டுமே செய்தனர். தென்காசியில் இருந்து காய்கறி, கனி வகைகள், பட்டு வஸ்திரங்கள், தங்கம், வெள்ளி, கொன்றை பூக்கள், மாலைகள் படைக்கப்பட்டன.கணபதி ஹோமம், அஸ்டாபிஷேகம், கலச அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள், சித்திரை விஷு கனி பூஜைகள், மேல் சாந்தி அபி தலைமையில் நடந்தன.