ஊட்டி கோவில்களில் பக்தர்களின்றி நடந்த புத்தாண்டு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஏப் 2020 01:04
ஊட்டி: தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சிகள் கோவில்களில் பக்தர்கள் கூட்டமின்றி அமைதியாக நடந்தது. ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது.
நடப்பாண்டு கொரோனா நோய் தொற்றால் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. கோவில்களில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கும் நோக்கில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்கள் நடை சாத்தப்பட்டது. கோவில் பூசாரி தலைமையில் மட்டும் முக்கிய பூஜைகள் நடந்து வருகிறது. தமிழ் புத்தாண்டின் போது பக்தர்கள் புடை சூழ சிறப்பு அலங்காரம் நடைபெறும் ஊட்டி மாரியம்மன் கோவில், மஞ்சூர் அன்னமலை முருகன் கோவில் உட்பட முக்கிய கோவில்கள் பக்தர்களின்றி கோவில் பூசாரி தலைமையில் மட்டும் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஊட்டி மாரியம்மன் கோவில் முன்பு பக்தர்கள் வெளியே நின்று பூஜை செய்ய கூட்டம் அதிகரித்தது. போலீசார் அங்கிருந்து வெளியேறுமாறு அனுப்பு வைத்தனர்.