சின்னசேலம்; ஊரடங்கு உத்தரவு காரணமாக சொர்ணபுரீஸ்வரர் கோவில் முன் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.சின்னசேலம் அடுத்த தென்பொன்பரப்பியில் வரலாற்று சிறப்பு மிக்க சொர்ணாம்பிகை சமேத சொர்ணபுரீஸ்வரர் கோவில் உள்ளது.இங்கு சொர்ணபுரீசுவரர், அம்பிகை உமையாள் சுவாமி மூலவராக பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். 1300 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில்சொர்ணபுரீசுவரர் லிங்க வடிவில் காட்சியளிக்கிறார்.மேலும் கோவிலின் அருகில் காகபுஜண்டர் என்ற சித்தர் சமாதியில் பீடம் அமைக்கப்பட்டு திருவிளக்கு ஏற்றப்பட்டு வருகிறது.நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் கோவில்களில்பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் தமிழ் புத்தாண்டு தினமான நேற்று அதிகாலையிலேயே மூலவருக்கு சிறப்பு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட திரவிய பொருட்களால் அபிேஷகம் செய்யப்பட்டு மூடப்பட்டது. தொடர்ந்து சொர்ணபுரீஸ்வரர் கோவிலுக்கு முன் நின்றவாறு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.