நாகர்கோவில், : குமரி மாவட்டத்தில் விமரிசையாக கொண்டாடப்படும் சித்திரை விஷூ, கொரோனா காரணமாக நேற்று களை கட்டவில்லை.குமரி மாவட்டத்தில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று சித்திரை விஷூ. வீடுகளில் கனி காணல், கோயில்களில் வழிபாடு, கோயில்களில் பக்தர்களுக்கு காய், கனி, கைநீட்டம் வழங்குதல் போன்றவை முக்கிய நிகழ்வுகள்.கோயில்களில் நீண்ட வரிசை இருக்கும். கொரோனா காரணமாக கோயில்களில் சிறப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை. அதிகாலை நடை திறந்த சிறிது நேரத்தில் அடைக்கப்பட்டு விட்டது. பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. கோயிலின் வெளியே நின்று பக்தர்கள் சுவாமி கும்பிட்டு சென்றனர். வீடுகளில் நிலை கண்ணாடி, கடவுள் படம், பழம், காய்கறிகள், கொன்றை பூ வைத்து கனி கண்டனர்.வரலாற்றில் முதல் முறையாக பக்தர்கள் இல்லாமல் விஷூ பூஜைகள் நடைபெற்றதாக பூஜாரிகள் கவலையுடன் தெரிவித்தனர்.