பதிவு செய்த நாள்
16
ஏப்
2020
10:04
மதுரை: கொரோனா ஊரடங்கால் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விழாவை எப்படி நடத்துவது என்பது குறித்து சாஸ்திர வல்லுனர்கள், அர்ச்சகர்களுடன் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
கொரோனா ஊரடங்கால், மதுரை சித்திரை திருவிழாவை எப்படி நடத்துவது என, அறநிலையத் துறை ஆலோசனை நடத்தி வருகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா, ஏப்., 25ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மே, 2ல் பட்டாபிஷேகம், 3ல் திக்விஜயம், 4ல் திருக்கல்யாணம், 5ல் தேரோட்டம் நடக்கிறது. வைகையில் அழகர் எழுந்தருள, அழகர் கோவிலில் இருந்து கள்ளழகர் வேடத்தில், சுவாமி, மே, 5ல் மதுரைக்கு புறப்படுவார். மூன்று மாவடியில், 6ம் தேதி எதிர்சேவை நடக்கிறது. 7ம் தேதி அதிகாலை தங்கக்குதிரை வாகனத்தில், கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார். சித்திரை திருவிழா, வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் விழாவில் லட்சக்கணக்கானோர் கூடுவர். கொரோனா ஊரடங்கால், திருவிழா நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சித்திரை திருவிழாவை எப்படி நடத்துவது என்பது குறித்து, சாஸ்திர வல்லுனர்கள், அர்ச்சகர்களுடன் அறநிலையத் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஓரிரு நாளில் முடிவு தெரியும்.