கமுதி : தமிழர்களின் பாராம்பரியம் மாறாமல் 200 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் புத்தாண்டான சித்திரை முதல் நாளில் கமுதி அருகே சேதுராஜபுரம், ராமசாமிபட்டி, கோரைப்பள்ளம் கிராமங்களில் விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து ஏர் கலப்பைகளை சுத்தம் செய்து காளை மாடுகளை குளிப்பாட்டி, அலங்காரம் செய்து, ஏர் பூட்டி, மொத்தமாக வயலில் பொன் ஏர்விடும் விழா நடத்துவது வழக்கம். இந்தாண்டு விவசாயத்தில் செலவினங்கள் குறைந்து அதிக மகசூல் கிடைத்து வருவாய் அதிகரிக்க வேண்டி சேதுராஜபுரத்தில் பொன் ஏர்விடும் விழா நடந்தது. வயல்களில் உழவு செய்து கிராமத்திற்குள்வந்த விவசாயிகளை முறைப் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.கொரோனா ஊரடங்கால் சமூக இடைவெளியுடன் பாரம்பரிய முறைப்படி மிக எளிதாக இந்த ஆண்டு ஏர் விடும் திருவிழா நடந்தது.