பதிவு செய்த நாள்
17
ஏப்
2020
11:04
தஞ்சாவூர், கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், தஞ்சை பெரியகோவில் சித்தரை திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலக பிரசித்தி பெற்ற, தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும், சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு சித்திரை திருவிழா, ஏப்., 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, மே, 2ம் தேதி தேரோட்டமும், மே,5ம் தேதியுடன் விழா நிறைவு பெறுவதாக இருந்தன. சித்திரை விழாவிற்கான பந்தகால் முகூர்த்தம், கடந்த மார்ச்.3ம் தேதி செய்யப்பட்டது. இந்நிலையில், கொரோனா முன்னெச்சரிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், சித்தரை திருவிழா ரத்து செய்யப்படுவதாக, அரண்மைனை தேவஸ்தானம், அறநிலையத்துறை சார்பில், அறிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்து கோவில் குருக்கள் ஞானமணி கூறியதாவது: சித்தரை திருவிழாவிற்கான கொடியேற்றமானது, சித்தரை சதய நட்சத்திரத்திலும், கொடியிறக்கம் சித்தரை நட்சத்திரத்திலும் இருக்க வேண்டும். இதனால், மற்றொரு நாளில் ஆகமவிதிப்படி நடத்த கூடாது என்றார்.