பதிவு செய்த நாள்
17
ஏப்
2020
04:04
ஈரோடு: கிராம கோவில் பூசாரிகளுக்கு வழங்கப்படும் கொரோனா நிவாரண நிதி, 1,000 ரூபாய் பெற அழைக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ஈரோடு அறநிலையத்துறை உதவி ஆணையர் வெங்கடேஷ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அறநிலையத்துறையின் கீழ் இயங்கும், கிராம கோவில் பூசாரிகள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள பூசாரிகளுக்கு, தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா நிவாரண உதவித்தொகை, 1,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இதற்காக ஈரோடு அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில், நலவாரியத்தில் பதிவு செய்துள்ள பூசாரிகள், உடனடியாக தங்கள் பெயர், கைபேசி, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க விபரம், அடையாள அட்டை விபரத்தை, தெரிவிக்க வேண்டும். ஈரோடு, கொடுமுடி, மொடக்குறிச்சி தாலுகா பூசாரிகள், 98655-71230 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கும், கோபி, நம்பியூர் தாலுகா பூசாரிகள், 63810-62869, சத்தி, தாளவாடி தாலுகா பூசாரிகள், 99427-34031, பவானி, அந்தியூர் தாலுகா பூசாரிகள், 94421-92599, பெருந்துறை, ஊத்துக்குளி தாலுகா பூசாரிகள், 97889-05009, காங்கேயம் பூசாரிகள், 99526-56683 என்ற எண்ணுக்கும் விபரங்களை அனுப்பலாம். கூடுதல் விபரத்துக்கு, ஈரோடு உதவி ஆணையர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். நேரில் வர தேவையில்லை. இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.